search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanging"

    • ரஞ்சித் சீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாஸ். வக்கீலான இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி வீட்டில் இருந்த ரஞ்சித் சீனிவாசை, அவரது மனைவி மற்றும் தாய்-மகள் முன்னிலையில் ஒரு கும்பல் வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்தது. ரஞ்சித் சீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்புகளை சேர்ந்த நிஜாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல்கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சபரூதின், மன்சாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நஸீர், ஜாஹீர்உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷரப் ஆகிய 15 பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சேர்க்கப்பட்ட முதல் 8 பேர் கொலையில் நேரடியாக ஈடுபட்டதும், மற்றவர்களுக்கு கொலை சதியில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    அதனடிப்படையில் 15 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகள் என மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

    குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்பு அனைவரின் மத்தியிலும் எழுந்தது. இதனால் மாவேலிக்கரை கோர்ட்டில் இன்று பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதன்படி குற்றவாளி 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் கருணாகர பிரபு (வயது33). இவருக்கு திருமணமாகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். தன்னை மறு வாழ்வு மையத்தில் சேர்க்குமாறு தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தாய் விரைவில் ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளார்.

    மன உளைச்சலில் இருந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது தாயும், மனைவியும் காப்பாற்றினர். இந்த நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டார். சிறிது நேரம் கழித்து மனைவி கதவைத் தட்டியபோது திறக்கவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கருணாகரபிரபு மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரவணன் குடிபோதையில் அவரது தந்தையை தாக்கி வந்ததால் ராமலிங்கம் மகனுக்கு பயந்து வீட்டுக்கு சரியாக வருவதில்லை.
    • மின் விசிறியில் சரவணன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராம லிங்கம். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்களும் சரவணன் (35) என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. ராமலிங்கமும் அவரது மகன் சரவணனும் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து வந்ததால் ஜெயலட்சுமி அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே ராமலிங்க மும் அவரது மகனும் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். மேலும் சரவணன் குடிபோதையில் அவரது தந்தையை தாக்கி வந்ததால் ராமலிங்கம் மகனுக்கு பயந்து வீட்டுக்கு சரியாக வருவதில்லை.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சரவணன் மது குடித்து விட்டு வீட்டில் அவரது தாயாரிடம் தகராறு செய்தார். அப்போது ஜெயலட்சுமி காலையில் திருமணத்துக்கு செல்ல உள்ளதால் தூங்குமாறு சரவணனை அறிவுறுத்தினார்.

    அதற்கு சரவணன் நீ எப்படி திருமணத்துக்கு செல்வாய் என பார்த்துக்கொள்கிறேன் என கூறி ஜெயலட்சுமியை படுக்கை அறைக்கு உள்ளே தள்ளி வெளிபுறமாக பூட்டி விட்டார்.

    காலையில் வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாத தால் ஜெயலட்சுமி ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டினரை அழைத்தார்.

    அப்போது அவர்கள் வீட்டின் முன் பக்க கதவை திறந்து உள்ளே வந்த போது வீட்டின் வரண்டாவில் உள்ள மின் விசிறியில் சரவணன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 36). இவருக்கு மது பழக்கம் இருந்தது.

    இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவராகவே வீட்டிற்கு வந்தார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பிரகாஷ் (47). விவசாயி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது விட்டதில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே முசிறி வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (47). விவசாயி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரகாஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது விட்டதில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரது உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தியாகராஜன் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
    • நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விரக்தியில் இருந்த தியாகராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கவுண்டிபாளையம் அருகே காளியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன்( 44). லாரி டிரைவர்.

    இந்நிலையில் தியாகராஜன் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சரியாகவில்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விரக்தியில் இருந்த தியாகராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த அவரது மகன் தந்தை தூக்கு போட்டு இருப்பதை பார்த்து சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து தியாகராஜன் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தியாகராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் தியாகராஜனின் மனைவி ஜெயமணி( 39) நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன் பட்டி உப்பிலியர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் தனக்கு வயிற்று வலி அதிக மாக இருப்பதாகவும் இருப்பி னும் வேலைக்கு சென்று வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • இந்நிலையில் மாலை அந்தப் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோவிந்தனுக்கு போன் செய்து உனது மகன் கார்த்திக் புத்தூர் அருகே ஒரு ஓடையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன் பட்டி உப்பிலியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (78) கூலித்தொழிலாளி. இவ ரது மகன் கார்த்திக் (24) இவர் கட்டிட மேஸ்திரி. இவரது

    மனைவி சரண்யா( 20). இவர்கள் கார்த்திக்கின் தந்தை கோவிந்தன் வீட்டுக்கு அருகிலேயே குடியிருந்து வந்தனர்.

    இந்நிலையில் கார்த்திக் தனக்கு வயிற்று வலி அதிக மாக இருப்பதாகவும் இருப்பி னும் வேலைக்கு சென்று வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை அந்தப் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோவிந்தனுக்கு போன் செய்து உனது மகன் கார்த்திக் புத்தூர் அருகே ஒரு ஓடையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தகவல் அறிந்த கோவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்து கார்த்திக்கின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோவிந்தன் வேல கவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கைலேஷ்வரன் வழக்கு பதிவு செய்து உடலை

    கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக நாமக்கல் அரசு

    மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனார்.

    • எடப்பாடி மேட்டு தெருவை சேர்ந்த பிரபாகரன் - சரஸ்வதி தம்பதியின் மகள் சந்தியா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • மாமியா ருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. சம்ப வத்தன்றும் சந்தியா திடீரென வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சின்னசோரகை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் பழனி (30) கோவையில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை செய்து வருகிறார்.

    3 மாத கர்ப்பிணி

    இவருக்கும், எடப்பாடி மேட்டு தெருவை சேர்ந்த பிரபாகரன் - சரஸ்வதி தம்பதியின் மகள் சந்தியா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் சந்தியா 3 மாத கர்ப்பமாக இருந்தார்.

    இந்நிலையில் சந்தியா விற்கும் அவரது மாமியா ருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. சம்ப வத்தன்றும் சந்தியா திடீரென வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வந்த நங்கவள்ளி போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சந்தியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மேட்டூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு சந்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    பின்னர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ தணிகாச்சலம், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஜலகண்டா புரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் சந்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், கணவர் பழனியிடம் இருந்து சந்தியாவின் பெண் குழந்தைக்கு உரிய நிவாரணம் பெற்று தருவதாகவும் தெரிவித்தனர்.

    • சசிகுமார் (வயது 27). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.
    • அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார் என கூறப்படுகிறது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. சசிகுமாரின் தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சசிகுமாரின் தாய் உறவினர் திருமணத்திற்காக பல்லடம் சென்று விட்டார். அன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தனது வாட்ஸ் அப்பில் சோகமான ஸ்டேடஸ்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இதை பார்த்து சந்தேகமடைந்த இவரது நண்பர்கள் சசிகுமார் வீட்டிற்கு வந்தனர். அங்கு அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக அட்டெண்டராக வேலை செய்து வருகிறார்.
    • பாகூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் மணமேடு எம்.பி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (40). பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக அட்டெண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ராஜேஷ் (15) மகனும், விமாஷினி (13) என மகளும் உள்ளனர்.

    ராதாகிருஷ்ணன் கடந்த 2 மாதங்களாக பாகூர் கன்னியகோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ராதாகிருஷ்ணன் மது குடிக்கும் பழக்கம் உடையவர். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி சரஸ்வதியிடம் தகராறு ஈடுபடுவார். சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சரஸ்வதி பணம் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் சரஸ்வதி வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டார். வெகு நேரமாகியும் கணவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த சரஸ்வதி ஜன்னல் வழியாக பார்த்த போது வேட்டியால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாகூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • முருகன் இவரது மனைவி மாரிச்செல்வி (34). கடந்த 10 வருடங்களாக அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் குடியிருந்து வருகின்றனர்.
    • இதற்கிடையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கிராமம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரிச்செல்வி (34). கடந்த 10 வருடங்களாக அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் குடியிருந்து வருகின்றனர். முருகன் குடும்பத்தினர் முறுக்கு வியாபாரம் செய்து வந்தனர். இதற்கிடையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சமையல் அறையில் கயிறு மூலம் மாரிச்செல்வி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாரிச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வாலிபர்-இளம்பெண் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள மேட்டுதொட்டியக் குளத்தை சேர்ந்தவர் கணேசன்(32), கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி கவிதா. கணேசனுக்கு மது பழக்கம் இருந்தது. இதனால் சரிவர வீட்டு செலவுக்கு பணம் தரவில்லை. இதனால் கணேசனுக்கும், அவரது தந்தை சின்னணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்றும் இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கவிதா அவர்களை விலக்கி விட்டுள்ளார். இந்த நிலையில் கணேசன் ரெயில்வே கேட் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மனைவி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே செங்கமலப்பட்டியை சேர்ந்தவர்பாண்டியன், சவுதியில் வேலை பார்கி றார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் செல்வ சுபத்ரா.

    இவர் தனது உறவினரான லாரி டிரைவர் அய்யப்பனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அய்யப்பன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அப்போது அய்யப்பனின் தாய் குருவம்மாள், தந்தை பாண்டி ஆகியோர் செல்வ சுபத்ராவிடம் பிரச்சினை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமி யிடம் அவர் தெரிவித்தார். அவர் தனது உறவினரை அனுப்பி செல்வசுபத்ராவை அழைத்து வருமாறு கூறினார்.

    உறவினர் செல்வ சுபத்ராவின் வீட்டிற்கு சென்றபோது வீடு உள்பக்க மாக பூட்டி கிடந்தது. கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்த போது செல்வசுபத்ரா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே பள்ளபட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள்(57). இவரது கணவர் மாரிமுத்துவை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குபே் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×