தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை

மணிகண்டன் கோணவாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.இந்த நிலையில் மணிகண்டன் தங்கி இருக்கும் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி பசுவேஸ்வரர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவரது மனைவி நாகராணி (37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மணிகண்டன மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நாகராணி தார்பாய் தைக்கும் வேலை பார்த்து வருகிறார்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்ற னர். நாகராணி குழந்தை களுடன் பவானியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

மணிகண்டன் லட்சுமி நகர் அருகில் உள்ள கோண வாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் மணிகண்டன் தங்கி இருக்கும் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம்பக்கத்தினர் உடனே மணிகண்டனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நாகராணி அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com