என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • மனைவி-குழந்தைகளை பார்க்க முடியாத வேதனை யில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது தாயார் வெளியே சென்றிருந்த நேரத்தில் கார்த்திகேயன் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    மனைவி-குழந்தைகளை பார்க்க முடியாத வேதனை யில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அம்மா நகரை சேர்ந்தவர் கார்த்தி கேயன்(வயது38). கட்டிட தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    திருமணமான முதல் கார்த்திகேயன் குடு ம்பத்துடன் கூடப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை கைவிடவில்லை. கடந்த 5 மாதத்துக்கு முன்பு கார்த்திகேயன் மது குடித்து விட்டு வந்ததால் அவரிடம் இனிமேல் மது குடித்து விட்டு வந்தால் வீட்டுக்கு வரக்கூடாது என்று கண்டித்தார்.

    இதனால் மனைவியிடம் கோபித்துக்கொண்டு வில்லியனூர் அம்மாநகரில் உள்ள தனது தாய் வீட்டில் கார்த்திகேயன் இருந்து வந்தார். தினமும் மனைவி-மகன்களை பார்க்க முடியாமல் கார்த்திகேயன் மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது தாயார் வெளியே சென்றிருந்த நேரத்தில் கார்த்திகேயன் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×