என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
- வில்லியனூர் அருகே நோய் கொடுமையால் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மேலும் வேலாயுதத்துக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே நோய் கொடுமையால் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அருகே சிவராந்தகம் காலனி மெயின் ரோட்டு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது50). இவருக்கு சுகுணா என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மது குடிக்கும் பழக்கமுள்ள வேலாயுதம் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மேலும் வேலாயுதத்துக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதனால் அவர் கடந்த 5 ஆண்டுகளாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சர்க்கரை நோய் குணமாகவில்லை. அவருக்கு 2 கால் பாதத்திலும் சர்க்கரை நோய் காரணமாக காயம் இருந்து வந்தது. இதனால் வேலாயுதம் கடும் அவதியடைந்து வந்தார்.
இந்த நிலையில் நோய் கொடுமையால் அவதியடைவதை விட இறந்து போகலாம் என அடிக்கடி கூறி வந்தார்.
சம்பவத்தன்று வேலாயுதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். வெளியே சென்றிருந்த அவரது மனைவி சுகுணா வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் வேலாயுதம் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வேலாயுதம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி சுகுணா கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






