என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வேலகவுண்டன்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்30 May 2022 3:29 PM IST (Updated: 30 May 2022 3:29 PM IST)
வேலகவுண்டன்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன் பட்டி அருகே இளநகர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 50) .பெயிண்டர். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் நளினியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசக்கல்பட்டி இளங்கோநகர் பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 2 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தைகள் இல்லை .இந்நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் நாளினி இருந்து உள்ளார்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கி–ழமை சுந்தரத்தின் உறவினர் பெருமாள் இறந்ததின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நளினியும், ரகுபதியும் சொந்த ஊரில் இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சுந்தரத்தின் மனைவி வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு இருந்தது.
கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த தாய், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மகள் நளினி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு கதறி அழுதார். அக்கம்பக்கத்தினரை அழைத்து நளினி உடலை மீட்டனர்.
இதுகுறித்து சுந்தரம் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×