என் மலர்
நீங்கள் தேடியது "woman"
- ஆப்பக்கூடல் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.
- இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த ஓரிச்சேரிபுதூர், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சாந்தி (52). இந்நிலையில் நேற்று சாந்தி ஓரிச்சேரிபுதூர், அய்யர் தோட்டத்திற்கு அருகே உள்ள ராட தன்னாட்சி முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
தோட்டத்தின் வண்டி தடத்திற்கு மேற்புறம் உள்ள விவசாயத் தோட்ட கிணறு அருகே சாந்தி நின்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.
அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மனைவி சுயம்புகனி (வயது55)
- நேற்று சுயம்புகனி வீடு வெளியே பூட்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மனைவி சுயம்புகனி (வயது55).
அரை நிர்வாண நிலையில்
நேற்று சுயம்புகனி வீடு வெளியே பூட்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தனர். அப்போது அங்கு ஆடைகள் களையப்பட்டு அரை நிர்வாண நிலையில் சுயம்புகனி இறந்த நிலையில் கிடந்தார்.
எஸ்.பி. விசாரணை
சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
அரை நிர்வாண நிலையில் சுயம்பு கனி இறந்து கிடப்பதால் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமா? போலீ சார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடும்பபிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை
இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர்.
மேலும் சுயம்பு கனியின் உறவினர்கள், அவரது கணவர், நண்பர்கள் ஆகியோரிடம் விடிய, விடிய விசாரனை நடத்தி நடத்தினர். தொடர்ந்து தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணை நடத்திய காவல் துறையினா் பழனிசாமியை கைது செய்தனா்.
- நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா்.
தாராபுரம் :
தாராபுரத்தை அடுத்த மூலனூரைச் சோ்ந்தவா் பழனிசாமி (வயது 53). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 25 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் 22 ந் தேதி சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா் பழனிசாமியை கைது செய்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தாா். திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் அப்பாஸ் (29). பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் அவிநாசி மகளிா் காவல் துறையினா் போக்சோ பிரிவின்கீழ் அப்பாசை 2020 ஆகஸ்ட் 16ந் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கின் மீதான விசாரணை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், அப்பாசுக்கு 25 ஆண்டுகள் சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த இரு வழக்கிலும் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜராகினாா்.
- மதுரை அருகே திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மதுரை
உசிலம்பட்டியை அடுத்த சீமானூத்தை சேர்ந்தவர் சின்னம்மாள் (43). இவரது கணவர் நடராஜ். இவர்களுக்கு மகள் சித்ரா (23) உள்ளார். இவரை கே.பரசுராமன் பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர்.
அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சித்ரா- ராமகிருஷ்ணன் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த சித்ரா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாய் சின்னம்மாள் சேடப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
- கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்
- அதிரடி சோதனை மேற்கொண்டனர்
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகம் ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் ஒரு வணிக வளாகத்தின் பின்புறம் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து எடமலைப் பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்று, அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் மில் காலனியைச் சேர்ந்த அருண்குமார் மனைவி அம்பிகா (வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- தூத்துக்குடி பூபாலராய புரம் அருகே உள்ள சாமு வேல்புரத்தை சேர்ந்தவர் யோனாஸ். மீனவர். இவரது மனைவி சகாயதனியா (வயது24)
- நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக கணவன், மனைவி ஆகியோர் சென்ற போது வேகத்தடையில் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பூபாலராய புரம் அருகே உள்ள சாமு வேல்புரத்தை சேர்ந்தவர் யோனாஸ். மீனவர்.
மோட்டார் சைக்கிள் விபத்து
இவரது மனைவி சகாயதனியா (வயது24). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
நேற்று மாலை பொரு ட்கள் வாங்குவதற்காக கணவன், மனைவி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். குரூஸ்புரம் அருகே சென்ற போது அங்குள்ள வேகத்தடையில் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இளம்பெண் பலி
இதில் தூக்கிவீசப்பட்ட சகாயதனியா பலத்த காய மடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்தவமனையில் சேர்ந்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபிசுஜின் ஜோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண் நண்பருடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக, சுகந்தி மற்றும் குமரேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மதுரை
ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெரு, என்.எஸ்.கே நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவரது வீட்டின் அருகே, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த குமரேசன் (27) என்பவர் குடியிருந்து வருகிறார்.
குமரேசன் அழகப்பன் நகர், வ.உ.சி தெருவை சேர்ந்த 25 வயது பெண்ணுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதை மணிகண்டன் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த குமரேசன், பெண் ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தப் பெண் வழக்கமாக வீட்டுக்குச் செல்லும் ஆட்டோ டிரைவர் புகழேந்தி (53) என்பவருக்கு போன் செய்தார். அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
ஆத்திரம் அடைந்த 25 வயது பெண், இன்னொரு ஆட்டோவில் டி.வி.எஸ் நகருக்கு சென்றார். அங்கு ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் நின்று கொண்டு இருந்த ஆட்டோ டிரைவர் புகழேந்தி மற்றும் அவரது மனைவிக்கு அடி- உதை விழுந்தது. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண் நண்பருடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக, சுகந்தி மற்றும் குமரேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- பெண் வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அண்ணாநகர் போலீசார் கவுண்டன் கால் பகுதியைச் சேர்ந்த தண்டீஸ்வரன், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
மதுரை
மதுரை பாண்டியன் நகர், சிவசக்தி தெருவை சேர்ந்த உதயபாண்டி மனைவி பாலம்மாள் (27). இவர் வண்டியூர், சவுராஷ்டிராபுரம் தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் ஓட்டலில் இருந்தார். அங்கு குடிபோதையில் வந்த 2 பேர் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றனர். இதை பாலம்மாள் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல், பெண் வியாபாரியை கத்தியால் குத்தி விட்டு தப்பியது.
இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் கவுண்டன் கால் பகுதியைச் சேர்ந்த தண்டீஸ்வரன், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
- வளர்மதி வழக்கு விசாரணைக்காக அவினாசி ஜே.எம்.கோர்ட்டுக்கு சென்றார்.
- நீதிபதி சபீனா பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அவினாசி :
அவினாசியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). இவருடைய மனைவி வளர்மதி (36) ஆகியோர் வழக்கு விசாரணைக்காக அவினாசி ஜே.எம்.கோர்ட்டுக்கு சென்றனர். அப்போது அறைக்குள் சென்ற வளர்மதி திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த நீதிபதி சபீனா உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்துவந்து அப்பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மயங்கி விழுந்த பெண் விசாரணைக்கு வந்தவர் என்று தெரிந்தும் உடனடியாக நீதிபதி சபீனா மனிதநேயத்துடன் உதவிய மனிதாபிமான செயலை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
- இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
- இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ்(41). தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா என்ற கமலா(30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பாத்திமா அருகே உள்ள சேம்பரில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் சுரேஷ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.
- உதயா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.
- இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி உதயா (51). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் உதயா வுக்கு உடல்நிலை சரி யில்லை என கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் அவர் மன வேதனையில் இருந்த வந்தார். இந்த நிலையில் உதயா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தாக்கிய 2 பேரும் ஏற்கனவே பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டவர்கள்.
மதுரை
மதுரை காமராஜர் சாலை, சிம்மபுரம் தெருவை சேர்ந்த தங்கராஜ் மனைவி சுபஸ்ரீ (21). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சுபஸ்ரீ வீட்டில் இருந்தார். அங்கு வந்த 2 பேர் அவரை தாக்கி விட்டு தப்பினர்.
இதுகுறித்து சுபஸ்ரீ தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதில் என்னை தாக்கிய 2 பேரும் ஏற்கனவே பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபஸ்ரீயை தாக்கிய சிவகுமார் (29), நிலக்கோட்டை வீலிநாயக்கன்பட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் (35) ஆகியோரை கைது செய்தனர்.