என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rails"

    • அந்த வீடியோவில் ஒரு சிறுவன் ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு உள்ளான்.
    • சிறுவர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

    ஒடிசா மாநிலம் பவுத் மாவட்டத்தில் ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு சிறுவர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் ஒரு சிறுவன் ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு உள்ளான். ரெயில் அவனை கடந்து சென்றவுடன் உற்சாகமாக எழுந்த சிறுவன் இன்னொரு சிறுவனுடன் சேர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். இதை அங்கே இருந்து இன்னொரு சிறுவன் வீடியோ எடுத்துள்ளான்.

    உயிரை பணயம் வைத்து சிறுவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    • உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டி சென்றார்.
    • ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டியதை கண்ட ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.

    அதன் பின் ரயில்வே ஊழியர்கள், பொது மக்களுடன் இணைந்து காரை நிறுத்தி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

    தண்டவாளத்தில் காட்டிய பெண் குடிபோதையில் உள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே அவ்வழியே வந்து கொண்டிருந்த பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கை செய்து ரெயிலை ரெயில்வே அதிகாரிகள் நடு வழியிலேயே நிறுத்தினர். மேலும் இந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த 15 ரெயில்கள் திருப்பி விடப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜூன் மாதம் முதல் வாரத்தில் 3 நாட்கள் தாம்பரம் - செங்கோட்டை ரெயில் இயங்க இருக்கிறது.
    • பேராவூரணியில் 2 நிமிடங்கள் வாராந்திர ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்.

    பேராவூரணி:

    பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்கம் சார்பில் தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 8-ந்தேதி முதல் வாராந்திர ரெயிலாகவும், ஜூன் மாதம் முதல் வாரத்தில் 3 நாட்கள் இயங்க இருக்கும் தாம்பரம் - செங்கோட்டை ரெயில் (வண்டி எண்: 20683), செங்கோட்டை - தாம்பரம் (வண்டி எண்:20684) மற்றும் ஏற்கனவே பேராவூரணி வழியில் இயங்கி கொண்டிருக்கும் செகந்திராபாத் - ராமநாதபுரம் (வண்டி எண்: 07696), ராமநாதபுரம் - செகந்திராபாத் (வண்டி எண்:07695) வாராந்திர ரெயில்கள் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி இடையில் உள்ள பேராவூரணியில் 2 நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • சத்தம் கேட்டதால் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பச்சக்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 120 ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை, பெங்களூர், கேரளா மற்றும் கோவை, சேலம் பகுதிகளை இணைக்கும் முக்கிய ரெயில்வே பாதையாக இது உள்ளது.

    இந்நிலையில் இன்று ஆம்பூர் அருகே சென்னை ரெயிலை கவிழ்க்க மாபெரும் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் ரெயில் நிலையம் அருகே வீரவர் கோவில் என்ற இடத்தில் 3.45 மணிக்கு ரெயில் வந்தது. அந்த இடத்தில் கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட சிமெண்ட் கல் மற்றும் கருங்கற்களை தண்டவாளத்தில் அடுக்கி வைத்திருந்தனர். ரெயில் அருகே வந்த போதுதான் என்ஜின் டிரைவர் அதை கவனித்தார்.

    அதனால் ரெயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை. வேகமாக வந்த ரெயில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் மீது மோதி தூக்கி வீசியது.

    மேலும் தண்டவாளத்தில் இருந்த சிமெண்டு கற்களை நொறுக்கியபடி ரெயில் சென்றது.

    மற்ற பெட்டிகளில் உள்ள சக்கரங்களும் கற்கள் மீது ஏறி நொறுக்கின. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. ரெயிலில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் கண்விழித்தனர்.

    சத்தம் கேட்டதால் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயிலை என்ஜின் டிரைவர் மெதுவாக இயக்கினார். பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் காவேரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது.

    அங்கிருந்து ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்தார்.

    பின்னர் என்ஜின் கல் மீது மோதிய பகுதிகளை பார்வையிட்டார். அதில் சிறிய அளவு சேதம் ஏற்பட்டிருந்தது.

    இதனையடுத்து 15 நிமிடம் காலதாமதமாக காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

    தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் தண்டவாளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பச்சக்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒடிசாவில், 3 ரெயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 292 பேர் உயிரிழந்தனர். 1100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில்வே அதிகாரிகள் உஷார் படுத்தபட்டனர்.

    ரெயில் என்ஜின் டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தபட்டனர்.

    திருச்சியில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரம் அருகே உள்ள வாளாடி ரெயில் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் லாரி டயர்களை அடுக்கி வைத்து கவிழ்க்க சதி நடந்தது.

    இதில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.

    இதேபோல திருப்பத்தூர் ரெயில்நிலையத்தில் சிக்னல் பெட்டி கற்கள் வீசி உடைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தினர். இந்த சதி சம்பவங்களில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.தொடர்ந்து விசாரணை நடப்பதாக கூறுகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் ரெயில்களை கவிழ்க்க அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். தண்டவாள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். 

    ×