என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  வில்லிவாக்கத்தில் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை வழக்கில் பைனான்சியர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வில்லிவாக்கத்தில் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை வழக்கில் பைனான்சியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கொளத்தூர்:

  வில்லிவாக்கம் அடுத்த தாதங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது28). இவர் அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

  தற்போது சரியாக வேலை இல்லாததால் மாரியால் கடனை சரியாக கட்டமுடியவில்லை. ரூ.35 ஆயிரம் பாக்கி வைத்து இருந்ததாக தெரிகிறது. இதனால் பணம் கொடுத்தவர் மாரிக்கு நெருக்கடி கொடுத்தார். இதில் மன வேதனை அடைந்த மாரி இதுகுறித்து வீடியோவில் பேசி அதை தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டு கடந்த 23-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  இதுதொடர்பாக வில்லிவாக்கம் அடுத்த ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் வடிவேலை போலீசார் கைது செய்தனர்.

  Next Story
  ×