என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  திருவள்ளூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம், நல்லாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேகநாதன்(வயது36). இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

  மேகநாதன் கடந்த சில மாதங்களாக மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த ஹேமலதா 2 குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

  இதனால் மனவேதனை அடைந்த மேகநாதன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  திருக்கழுக்குன்றம் அடுத்த அமிர்தபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஏகம்மாள்(60). கணவரை இழந்த இவர் மகனுடன் வசித்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஏகாம்மாள் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  Next Story
  ×