search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "சேலம் செய்திகள்"

  அடையாள அட்டை வழங்க மறுத்ததால் அ.புதூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
  மகுடஞ்சாவடி:

  சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதூர் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 1200-க்கும் மேற்பட்டோர் பணி  செய்து வருகின்றனர்.

  இவர்களுக்கு அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி கடந்த மாதத்தில் முடிவடைந்த நிலையில் பணிபுரிபவர்களுக்கு புதிய அட்டை வழங்க  ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தி வந்தனர்.  மேலும், ரூ.1000  கட்டினால் மட்டுமே உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த   200- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊராட்சி   மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி  போலீசார்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

  இப்பிரச்சினை குறித்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்பந்தப்பட்ட  அதிகாரிகளோ, ஊராட்சி தலைவரோ நேரில் வரவில்லை.  அதுமட்டுமல்லாமல் இந்த ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாதது பெரும் குறைபாடாக இருந்து வருகிறது. 

   4 மணி நேரத்துக்குப் பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி தள  பொறுப்பாளர்களை வைத்து புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் கூறியதாவது:-

   அ. புதூர் ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாததால் இப்பகுதியில் நடைபெறும் ஊராட்சி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது எனவும், ஏற்கனவே ஜல் ஜீவன் குடிநீர் குழாய் இணைப்பு பெறப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் வருவதில்லை எனவும், இது குறித்து ஒன்றிய ஆணையாளரிடம்  தெரிவித்தால், அவர் தலைவர் சொல்படி கேளுங்கள் என்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்
  நாளை மறுநாள் பிளஸ்-2 தொழில் பாடம் தேர்வு (28-ந்தேதி) நடக்கிறது.
  சேலம்:

  தமிழகம் முழுவதும்  கடந்த (5-ந்தேதி) வியாழக்கிழமை  பிளஸ்-2 பொதுத்–தேர்வு  தொடங்கியது.  இந்த தேர்வு சேலம்  மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும்  நடைபெற்று வருகின்றன. 

  கடந்த 23-ந்தேதி (திங்கட்கிழமை)  உயிரியல், தாவரவியல், வரலாறு,  வணிக கணிதம் மற்றும் புள்ளி விபரங்கள், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயரிங்,  அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங்,  டெக்ஸ்டைல்  டெக்னாலஜி, அலுவலக நிர்வாகம் மற்றும் செயலக பதவி உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றன.

  இதனால்   12-ம் வகுப்பு ெதாழில் பாட பிரிவை தவிர மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் அன்றைய தேதியில்  தேர்வு முடிவடைந்து விட்டது .  இதனால் 12-ம்  வகுப்பு  மாணவ- மாணவிகள் 23-ந்தேதி அன்று மகிழ்ச்சியுடன் ஒருவருக்ெகாருவர் வாழ்த்து  ெதரிவித்தபடி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

  இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (28-ந்தேதி) பிளஸ்-2  தொழில் பாட பிரிவுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுடன் பிளஸ்-2 பொதுத் தேர்வு நிறைவடைகிறது.
  காளிப்பட்டி ஸ்ரீ வீரகாரன் புடவைக்காரி அம்மன் கோவிலில் மறுபூஜை விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
  ஆட்டையாம்பட்டி:

  காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் அருகில் வீரகாரன் சுவாமியும், காளிப்பட்டி சந்தை எதிரே ஸ்ரீ புடவைக்காரி அம்மன் சாமியும் உள்ளது. 

  இக்கோவில்களில் தெவ மறுபூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், குலதெய்வ கோவில் பங்காளிகள் கிடா, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முன்னதாக ஸ்ரீ வீர காரன் சுவாமிக்கும் ஸ்ரீ புடவைக்காரி அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு மலர்அலங்காரம் நடைபெற்றது. 

  இதில் முத்தனம் பாளையம், தப்பகுட்டை, ஆட்டையாம்பட்டி, திருமலகிரி செம்மன் திட்டு, இளம்பிள்ளை சிவதாபுரம், கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி, அக்கர பாளையம், வீராணம், வேடப்பட்டி, கே ஆர் தோப்பூர், சேவாம்பாளையம், உடையாப்பட்டி, மெய்யனூர், அழகாபுரம், பொண்பரப்பிபட்டி உள்பட குலதெய்வ கோவிலுக்கு பாத்தியப்பட்டகோவிலுக்கு பாத்தியப்பட்ட வன்னியர் குல மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் கோயில் பங்காளிகள், பூசாரிகள் ஆகியோர்  செய்தனர்.
  சேலத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், கடனுதவியை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
  சேலம்:

  தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில்  “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை” தொடங்கி வைத்தார். 

  சேலம் மாவட்டத்தில் 86 கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. இந்த ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி காணொலி மூலமாக ஓளிபரப்பப்பட்டது.

  அயோத்தியாபட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டார்.விழாவில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.9,770  மதிப்பிலான மானியத்துடன் கூடிய இடுபொருட்களும், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும்  கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

  நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வம், வேளாண் இணை இயக்குநர் கணேசன், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு  தலைவர்  புவனேஸ்வரி செந்தில்குமார் மற்றும் விவசாயிகள்  கலந்துகொண்டனர்.
  சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  சேலம்:

  சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தின்னப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன். இவர் இன்று காலை தனது மனைவி முத்துமாரி, மகன் சிலம்பரசன் ஆகியோருடன் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தார். 

  அப்போது  மறைத்து வைத்திருந்த மண் எண்ணையை  ஊற்றி 3 பேரும்  தீக்குளிக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை பீச்சி அடித்து  அவர்களை மீட்டனர். 

  அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த சக்திவேல் என்பவர் நிலத்தை கேட்டபோது பா.ம.க. பிரமுகர் சேகர் என்பவரிடம் 1.50 லட்ச ரூபாய்க்கு நிலத்தை விலைக்கு வாங்கி விட்டதாக கூறி இருவரும் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர்.

  இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  சேலம் சன்னியாசிகுண்டு அருகே என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலியானார்.
  சேலம்:

  சேலம் அம்மாப்பேட்டை ராமநாதபுரம் ரஷிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெய்விஷ்வா (வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று இரவு சீலநாயக்கன்பட்டி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சன்னியாசி குண்டு பிரிவு ரோடு அருகே  ெசன்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய ேமாட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது. 

  இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதற்கிடையே அங்கு வந்த உறவினர்கள் ஜெய்விஷ்வாவின் உடலை பார்த்து கதறி அழுதனர் இந்த சம்பவம் அந்த பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  சேலம் இரும்பாலை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
  சேலம்:

  சேலம் இரும்பாலை அகே உள்ள மாரமங் கலத்துப்பட்டி அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் ஹரிபிரகதீஷ் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். 

  இவர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. 

  தகவல்அறிந்த இரும்பாலை போலீசார் அங்கு விரந்து சென்று அவரது உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சேலம அரசு ஆஸ்பத்திரிக்கு அனுபபி வைத்தனர்.

  அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?  என்பது குறித்து போலீசார் விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
  ×