search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attempt"

    • தொடர்பாக பிடிக்கப்பட்ட லாரி ஒன்று பல மாதங்களாக நின்று கொண்டிருந்தது.
    • கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பா திரிப்புலியூர் நத்தவெளி சாலையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு விசாரணை வழக்கு தொடர்பாக பிடிக்கப்பட்ட லாரி ஒன்று பல மாதங்களாக நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை நின்று கொண்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது.இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து உடனடியாக மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    பின்னர் தீயை அணைக்க முயற்சி செய்த நிலையில், தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த லாரியின் தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன்.
    • பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகள் மீனா (22). இவருக்கும் இவரது சகோதரிக்கும் நேற்று இரவு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மீனா வீட்டில் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். இதை கண்ட பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39).
    • சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி பிடி ஆணை பிறப்பித்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த ஜெயபிரகாஷ் இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி பிடி ஆணை பிறப்பித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷை கன்னங்குறிச்சி போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

    வேலாயுதம்பாளையம் அருகேவக்கீலை தாக்கி கொல்ல முயற்சி

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. வழக்கறிஞரான இவர் சவுக்கு சங்கரின் ஆதரவாளர் என கூறப்படுகிறது. சவுக்கு சங்கரின் யூ டியூப் நிர்வாகிகளான சூர்யா மற்றும் பிரதீப் ஆகியோர் ராஜாவை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து காரில் வேலாயுதம்பாளையம் வந்தனர். மூன்று பேரும் வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறை பகுதியில் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் எதிரில் உள்ள பேக்கரிக்கு வெளியே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் வக்கீல் ராஜா மற்றும் சவுக்கு சங்கரின் யூடியூப் அட்மின்கள் சூரியா, பிரதீப் ஆகிய மூன்று பேரையும் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் வழக்கறிஞர் ராஜாவுக்கு தாடை மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் தாக்குதல் நடத்தியவர்களை திருப்பித் தாக்க, 6 பேரும் அவர்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். சவுக்கு சங்கரின் யூடியூப் அட்மின்கள் சூரியா, பிரதீப் இருவரும் அவர்களது காரில் ஏறி தப்பிச் சென்றவர்களை துரத்திக் கொண்டு சென்றனர். காரில் தப்பிச் சென்ற மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் நாமக்கல் மாவட்ட பகுதிக்கு சென்று மறைந்து விட்டனர்.

    இந்நிலையில் படுகாயம் அடைந்த ராஜாவை உடனடியாக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வழக்கறிஞர் ராஜா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆன பதிவுகளை கைப்பற்றி தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • திருச்சி பொன்மலையில்போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து ரெயில்வே வேலையில் சேர முயற்சி
    • 4 பேர் மீது வழக்குபதிவு- போலீசார் நடவடிக்கை

    திருச்சி,  

    திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்ல துரை. இவர் ரெயில்வே ஊழியர். கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிடுகிறார்.

    இவர் உயிருடன் இருக்கும் போதே முதல் மனைவி பழனியம்மாள் மற்றும் பிள்ளைகள் ராஜா, ராதா , சதீஷ்குமார் ஆகியோர் செல்லத்துரையை விட்டு பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.

    இதனால் செல்லத்துரை சரோஜா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண் டார். சரோஜாவுக்கு கதிர் வேல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரெயில்வேயில் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்காக முதல் மனைவி பழனிய ம்மாள் அவரது பிள்ளைகள் ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகியோர் 2-ம் தாரத்து மகன் கதிர்வேலை சட்ட வாரிசாக காட்டாமல் மறைத்து மோசடி செய்து வாரிசு சான்றிதழ் பெற்று ள்ளனர்.

    மேலும் அந்த வாரிசு சான்றிதழை கொடுத்து ரெயில்வே வேலை பெறு வதற்கு முயற்சி செய்து ள்ளனர்.

    இதனை அறிந்த கதிர் வேல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காவல்துறையி னரிடம் புகார் அளித்தார்.அதன் மீது நடவடிக்கை இல்லை என்பதால் திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 5-ல் வழக்கு பதிவு செய்ய கூறி புகார் செய்தனர்.

    புகார் மனுவை விசாரித்த நீதிமன்றம் பழனியம்மாள், ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த பொன்மலை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டதன் பேரில் பொன்மலை போலீசார் பழனியம்மாள், ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • முகமூடி அணிந்த மர்ம நபர் கண்காணிப்பு காமிராவை அடித்து உடைத்து துணிகரம்
    • கோட்டூர் போலீசார் வழ்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் தொழிற்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு முக மூடி அணிந்த மர்ம நபர் வந்தார்.அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தார். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். அப்போது ஆள் நடமாட்டம் இருந்ததால் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழ்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு

    பெரம்பலூர்

    திருமானூர் அருகே குருவாடி கிராமத்திற்கும், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கிராமத்திற்கும் இடையே செல்லக்கூடிய கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையொட்டி அப்பகுதியில் நில அளவிடும் பணிைய அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். இதற்கு குருவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்தால் நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    கிராம மக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த தூத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளான சுயராஜன் (வயது 52), மகேந்திரன் (41) ஆகியோர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர் தீக்குளிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம் 63 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.
    • வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சின்ன வீராணம் பகுதியை சேர்ந்த வர் சின்னப்பொண்ணு(50), இவரது மகன் லோகேஷ் (18) ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

    பின்னர் சின்ன பொண்ணு மறைத்து வைத்து கொண்டு வந்த மண் எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

    இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சின்ன பொண்ணு கூறுகையில், எனது கணவர் ராஜேந்திரன் பெயரில் 2 3/4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு எனது கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.

    பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஓருவர் 2 3/4 ஏக்கர் நிலத்தில் 1 3/4 சென்ட் நிலத்தை ஏமாற்றி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தார்.எங்கு சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டுகிறார்.

    இது குறித்து வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

    எனவே மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களிடமிருந்து ஏமாற்றி ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரி வித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார்.
    • கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார். இதை பார்த்த பேரூராட்சி ஊழியர்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரித்த போது, தனக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. மேலும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறேன்.

    இந்த நிலையில் இன்று வேலைக்கு தாமதமாக வந்ததால் பேரூராட்சி ஊழி யர்கள் திட்டினர். இதனால் மனம் உடைந்த நான் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசாரி டம் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுக்கோட்டை அருகே பணித்தள பொறுப்பாளர் தற்கொலை முயற்சி ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • தேசிய ஊரக பணியாளர்கள் காரையூர் போலீசில் புகார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள முள்ளிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட (100 நாள் வேலை) பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி கலைச்செல்வி என்பவர் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டையை வாங்க வந்தார்.

    இதைப்பார்த்த பெண் ஒருவர் ஊராட்சி தலைவரை செல்போனில் தொடர்பு கொண்டு கலைச்செல்வி பணித்தள பொறுப்பாளராக இருக்கக்கூடாது. இது தொடர்பாக ஏற்கனவே பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    இதனை கேட்டு மனமுடைந்த கலைச்செல்வி மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர், செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), மேற்பார்வையாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்ட பணியாளர்கள் காரையூர் போலீசில் புகார் அளித்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    • அரியலூர் அருகே பிறந்து 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடைபெற்று உள்ளது
    • தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிறந்து 41 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி மேல தெருவை சேர்ந்தவர்கள் பெரியசாமி ரதியா (வயது 23) தம்பதி இவர்களது குழந்தை ரித்திகா. பிறந்து 41 நாட்களே ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரதியா அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த பார்த்த போது ரித்திகா வாயிலிருந்து நுரை வந்த வண்ணம் இருந்தது. குழந்தை அருகே விஷ பாட்டில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட ரதியா மற்றும் அவரது உறவினர்கள் ரித்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ெஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் குழந்தை ரித்திகாவை மேல் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ரதியா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தின்னப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன். இவர் இன்று காலை தனது மனைவி முத்துமாரி, மகன் சிலம்பரசன் ஆகியோருடன் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தார். 

    அப்போது  மறைத்து வைத்திருந்த மண் எண்ணையை  ஊற்றி 3 பேரும்  தீக்குளிக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை பீச்சி அடித்து  அவர்களை மீட்டனர். 

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த சக்திவேல் என்பவர் நிலத்தை கேட்டபோது பா.ம.க. பிரமுகர் சேகர் என்பவரிடம் 1.50 லட்ச ரூபாய்க்கு நிலத்தை விலைக்கு வாங்கி விட்டதாக கூறி இருவரும் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ×