கொசு மருந்து குடித்து ஊழியர் தற்கொலை முயற்சி

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார். கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .
கொசு மருந்து குடித்து ஊழியர் தற்கொலை முயற்சி
Published on

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார். இதை பார்த்த பேரூராட்சி ஊழியர்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரித்த போது, தனக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. மேலும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறேன்.

இந்த நிலையில் இன்று வேலைக்கு தாமதமாக வந்ததால் பேரூராட்சி ஊழி யர்கள் திட்டினர். இதனால் மனம் உடைந்த நான் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசாரி டம் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com