என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான சபரி
காதல் டார்ச்சரால் மாணவி தற்கொலை முயற்சி- கைதான வாலிபர் ெஜயிலில் அடைப்பு
- அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
- தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சபரி (வயது 25). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
மேலும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் சபரி மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். உறவினர் வீட்டில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீசார் நேற்று அங்கு சென்று சபரியை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.






