என் மலர்
நீங்கள் தேடியது "Cold weather"
- குளிர் அதிகமாக இருக்கும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும்.
- 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதமான குளிர்காற்று ஊடுருவி இதமான சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில் வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக, வறண்ட வாடை காற்றின் ஊடுருவல் தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்து இருக்கிறது.
இந்த தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஆகிய 4 நாட்களுக்கு இரவு, அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரித்து குளிரும் வாட்டி வதைக்கும், பனிமூட்டமும் உருவாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் 18 செல்சியஸ் அதாவது 64.4 டிகிரி முதல் 21 செல்சியஸ் (69.8 டிகிரி) வரையிலும், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் 16 செல்சியஸ் (60.8 டிகிரி) முதல் 18 செல்சியஸ் (64.4 டிகிரி) வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை காணப்படும். அதாவது குளிர் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும் என்றும் மேலும் அவர் கூறினார்.
இதுதவிர நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 செல்சியஸ் (46.4 டிகிரி) முதல் 10 செல்சியஸ் (50 டிகிரி) வரை இருக்கும் எனவும், சில இடங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
- கடும் குளிர் காலநிலையிலும் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அன்னதானப்பட்டி:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த மாதம் ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த மல்லி இன்று கிலோவுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.600 என விற்கப்பட்டு வருகிறது. அதே போல ரூ.600 க்கு விற்ற முல்லை ரூ.200வரை விலை குறைந்து இன்று ரூ.400 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோவுக்கு) வருமாறு :-
மல்லிகை- ரூ.600, முல்லை- ரூ.400, ஜாதி மல்லி- ரூ.280, காக்கட்டான்- ரூ.200, கலர் காக்கட்டான் - ரூ.200, சி.நந்தியா வட்டம் - ரூ.180, சம்மங்கி- ரூ.15, சாதா சம்மங்கி- ரூ.30, அரளி- ரூ.150, வெள்ளை அரளி- ரூ.150, மஞ்சள் அரளி- ரூ.150, செவ்வரளி- ரூ.180, ஐ.செவ்வரளி- ரூ.180, நந்தியா வட்டம்- ரூ.180. தற்போது ஐப்பசி மாத நிலவரப்படி குளிர் காலநிலை நிலவுகிறது.
வருகிற கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடும் குளிர் காலநிலை நிலவும். அதற்கடுத்து தை மாதம் பொங்கல் பண்டிகை வரை பூக்கள் விற்பனை சீசன் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
- கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ள டெல்லி மக்கள் சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.
டெல்லி:
வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ள டெல்லி மக்கள் சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக, மழலையர் பள்ளிகள் முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 12-ந்தேதி வரை விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.
வடமாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசுகிறது. மேலும் கடுமையான பனி மூட்டமும் நிலவுகிறது.
குஜராத் தலைநகர் காந்திநகரில் 6.8 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவானதால் மக்கள் குளிரில் நடுங்கினர். இதனால் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். ஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் மற்றும் பவன் நகரில் இதே நிலை நீடித்தது. இன்று (வெள்ளிக்கிழமை) 2 அல்லது 3 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இமாசலபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. நேற்றுமுன்தினம் இரவு பனிப்பொழிவு 5 செ.மீ. அளவுக்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு அங்கு மணாலி மற்றும் கல்பா நகரங்களில் மைனஸ் 9.3 டிகிரி மற்றும் மைனஸ் 8 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவானது. சிம்லாவில் மைனஸ் 0.6 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்ப நிலை இருந்தது.
அதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் உள்ளிட்ட நகரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதோடு, அங்கு 1.0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. அங்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே பீகாரில் வாட்டி வதைக்கும் குளிருக்கு போலீஸ்காரர் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாலந்தா மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர ஷா என்ற போலீஸ்காரர் போலீஸ் நிலைய வளாகத்துக்குள் இருந்தபோது குளிரால் சரிந்து விழுந்தார். சில நிமிடங்களில் அவர் பரிதாபமாக இறந்தார். #Biharpolicedeath






