டெல்லியில் கடும் பனிமூட்டம்: 12-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ள டெல்லி மக்கள் சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.
டெல்லியில் கடும் பனிமூட்டம்: 12-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

டெல்லி:

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ள டெல்லி மக்கள் சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக, மழலையர் பள்ளிகள் முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 12-ந்தேதி வரை விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com