என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிகள் விடுமுறை"
- இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்தனர்.
- மழை நிற்காததால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் தங்களின் வீடுகளுக்கு சென்றனர்.
டிட்வா புயலானது சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்தனர்.
ஆனால், விடுமுறை விடப்படாததால் மாணவர்கள் மழையிலேயே பள்ளிக்கு சென்றனர். மாலை நேரம் ஆகியும் மழை நிற்காததால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் தங்களின் வீடுகளுக்கு சென்றனர்.
இதனால், பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோரும் அவதி அடைந்துள்ளனர்.
- பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.
- மழை நிலவரத்தைப் பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அறிவிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், மழை நிலவரத்தைப் பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
- உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அறிவிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
- தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும்.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாக நாளை புதுச்சேரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களிலும் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.
- காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
- முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி நிலவி வருகிறது. அதனுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
- விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
- பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும்.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரியில் நாளை (15.11.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்து.
டெட் தேர்வு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
நாளைய விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
- கனமழையின் காரணமாக திருப்பத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி திருப்பத்தூரில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அறிவித்துள்ளார்.
- மோன்தா புயல் நாளை ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைக் கடக்க உள்ளது.
- காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முழுமையாக தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதனால் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் காரணமாக சென்னையில் இன்று தொடர் மழை பெய்து வருகிறது.
மோன்தா புயல் நாளை ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்டோபர் 28) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- பஞ்சாப்பில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
- சுமார் 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சண்டிகர்:
வட மாநிலங்களில் பருவ மழை கொட்டி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.
சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை எதிரொலியால் செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று என மாநில அரசு தெரிவித்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களும் நாளை ஒரு நாள் மூடப்படும் என அறிவிப்பு.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களும் நாளை ஒரு நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






