என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
    X

    காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    • அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை.
    • தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×