என் மலர்
நீங்கள் தேடியது "schools leave"
- மழை பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் நேரில் பார்வையிட்டார்.
- மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் நேரில் பார்வையிட்டார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மழை பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதால் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு உட்பட குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனகாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.