என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை எச்சரிக்கை"

    • அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
    • டிட்வா புயல் தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது.

    வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, கடலூர், அரியாலூர், காஞ்சிபுரம், மியலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

    ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலூர், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சி, திருப்பூர், வேலூர் மற்றும் புதுவை, காரைக்காலில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இது மேற்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

    வருகிற 26-ந்தேதி அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. மறுநாள் 27-ந்தேதி காலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபால், சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • தமிழகம், புதுவை, காரைக்காலில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

    சென்னையில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.

    அரபி கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாகும். குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகம், புதுவை, காரைக்காலில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. வரும் 21ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

    அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. தமிழக கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோழிக்கோடு, வயநாடு கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 23-ந்தேதி வரை பல மாவட்டங்களில் பலத்தமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே வருகிற 27-ந்தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இன்னும் நான்கு, ஐந்து நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த வருடம் முன்னதாகவே தொடங்க இருக்கிறது.

    இந்தநிலையில் அங்கு பல மாவட்டங்களில் தற்போதே மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கோழிக்கோடு, வயநாடு கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று வருகிற 23-ந்தேதி வரை பல மாவட்டங்களில் பலத்தமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி.
    • குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்திருந்தனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குாட தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோ ஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த 4-ந்தேதியில் இருந்து நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

    இன்று வைகாசி மாத அமாவாசை தினத்தை யொட்டி சென்னை, கோவை, நெல்லை, தூத்துக் குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் நள்ளிரவு முதல் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட்பு முன்பு குவிந்தனர்.

    இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பினர்.

    காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பக்தர்கள் வெயில் தெரியாத நிலையில் சாமி தரிசனம் செய்ய சென்றனர். இன்று மழை பெய்தால் அனுமதி வழங்கப்படாது என்று முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனவே தாணிப்பாறை வரை சென்று கோவிலுக்கு செல்ல முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இன்று குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்திருந்தனர்.

    வைகாசி அமாவாசை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத் தினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்தி ருந்தனர். பக்தர்கள் பல முறை தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தற்போது வரை மருத்துவக்கு ழுவினர் நியமிக்கப்படாதது அனைத்து தரப்பினருக்கும் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. 

    • தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை.
    • சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னையில் கடந்த 2 நாட்களாக மழைபெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திண்டுக்கல், கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, குமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
    • மழை காரணமாக பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.

    வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கிறது. நேற்றைய தினம் இரவு 9 மணி நிலவரப்படி 63,242 பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10,124 பேர் வந்துள்ளனர்.

    இந்தநிலையில் சபரி மலையில் இன்றும் பக்தர் கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது, வலிய நடைப் பந்தலில் 5 வரிசையில் மட்டும் பக்தர்கள் வரிசையில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்கு பிறகு வலிய நடைப்பந்தலில் பக்தர்கள் காத்து நிற்காமல் பதினெட்டாம் படி ஏறிச் சென்றனர்.

    தமிழக பக்தர்கள் குறைவான அளவில் வருவதே சபரிமலையில் கூட்டம் இல்லாமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது. மழை மற்றும் புயல் அச்சுறுத்தல் நீங்கியபிறகு தமிழகத்தில் இருந்து வழக்கம்போல் அதிக பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
    • 15-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், சில தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி இன்று (டிசம்பர் 10) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை (டிசம்பர் 11) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
    • அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், சில தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 10) காலை 10 மணிக்குள்ளாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
    • கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதேபோல் சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
    • சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இன்று இது மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக இன்று முதல் வருகிற 14 ஆம் தேதி வரை மழைப்பொழிவு தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும் சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது.
    • ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இன்று இது மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை என ஆறு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    ×