12 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை மழை எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
12 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை மழை எச்சரிக்கை
Published on

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

வருகிற 26-ந்தேதி அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. மறுநாள் 27-ந்தேதி காலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபால், சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com