search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Rains"

    • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்துவருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், மந்தைவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், சாந்தோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    சென்னை உள்பட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
    • இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 25 முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

     


    அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

    • உலகின் சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.
    • தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

    உலகளவில் காலநிலை மாற்றம் காரணமாக இயற்கை பேரிடர்கள் மனித சக்தியால் கையாள முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனை உண்மையாக்கும் சம்பவங்கள் மனித குலத்திற்கு தினந்தோறும் பாடம் கற்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டும், சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.

    இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி திணறிய சென்னை பொதுமக்கள், தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

     

    தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களும் தனி தீவுகளாகின. இங்கும் வெள்ளத்தில் சிக்கித் திணறும் பொது மக்களை மீட்கும் பணிகளில் பொது மக்கள், தன்னார்வளர்கள், மத்திய மாநில அரசுகளின் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை இயற்கை பேரிடர் ஏற்படும் போதும், பொதுமக்கள், தன்னார்வ தொண்டாளர்கள், பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் கடற்படை வீரர்களே மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனினும், பொது மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி பணியாற்றும் வழக்கம் பொதுமக்கள் காணாத சம்பவமாகவே இருந்து வருகிறது.

     


    பேரிடர் சமயங்களில் களமிறங்கி சேவையாற்றுவதில் ஏதேதோ காரணங்களால் தள்ளி நிற்கும் அரசியல் கட்சிகள் அரசு இதை செய்திருக்கலாம், இந்த பணிகளை மேற்கொண்டிருக்கலாம், போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பெரும்பாலும் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.

    குற்றச்சாட்டுகளால் அரசுக்கு குறைகளை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும், பொது மக்களுக்கு சேவையாற்ற துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் இனியாவது களத்தில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் வழக்கம் நடைறைக்கு வருமா என்பதே பேரிடரில் சிக்கித் தவிக்கும் பொது மக்கள் மற்றும் அவர்களை நினைத்து வாடுவோரின் தற்போதைய மனநிலையாக உள்ளது.  

    • தமிழக தலைநகர் சென்னை தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.
    • வளர்ச்சி அடைய தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் இயக்குநரகம் (DTCP) என்பது ஒரு மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. சட்டவிரோத கட்டிடங்களை தடுத்து நிறுத்துவது, வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட், நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான விஷயங்களில் மற்ற ஏஜென்சிகளுக்கு இந்த அமைப்பு ஆலோசனைகளை வழங்குகிறது.

    அனைத்து ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் எந்தவொரு பெரிய திட்டங்களையும் தொடங்குவதற்கு முன், மாநிலத்தின் DTCP-யிடம் இருந்து முறையான சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் சட்டம் 1971 மூலம் நகரம் மற்றும் நாடு திட்டமிடல் இயக்குனரகம் நிறுவப்பட்டது.

     

    மாநிலம் முழுவதும் அதிகார வரம்பைக் கொண்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் (H&UD) கட்டுப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் டெக்-ஹப் "ஸ்மார்ட் சிட்டி"-யான சென்னையில், நல்ல வேலை வாய்ப்புகள், வீடுகள் மற்றும் வசதிகள் போன்ற வாய்ப்புகள் பல இருப்பினும் மாறி வரும் வானிலையின் கோர முகம் மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

    வரலாற்றில் வெள்ளம், புயல் போன்ற பல்வேறு இயற்கை பிரச்சினைகளை கடந்து வந்த பிறகும் ஒவ்வொரு வருடமும் சென்னை மக்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கனமழை, புயல் ஏற்படும் போது இடம்ப்பெயர்வு, மற்றும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.

     


    இது வீடு வாங்குபவர்களுக்கு சென்னையை வாழ்வதற்கான இடமாகத் தேர்ந்தெடுப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் புலம்பெயர்ந்தோரை சென்னை தொடர்ந்து அதிகளவில் வரவேற்று வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புகளில் ஏற்றம் ஏற்பட்டதால், சென்னை நகரம் மக்களை வாழ செய்கிறது. மேலும் அவர்கள் வளர்ச்சி அடைவதற்கும் தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தோரை கவர்ந்துவரும் சென்னை, அதன் மக்கள் தொகையை 1 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இது தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் இன்னும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மிகவும் அடர்த்தியாக நிரம்பிய வீடுகளை உடையது.

     

    வருங்காலங்களில் தீவிர வானிலை சமயங்களில் சேதங்கள் அதிகமாகவும், வாழ்க்கை முறை கடினமாகவும் இருக்கும். தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகை இருந்தபோதிலும், கடந்த 16 ஆண்டுகளில், பேரழிவுகரமான 2015 வெள்ளத்திற்கு பிறகும், சென்னையின் பெரும்பாலான பிரச்சனைகள் போதிய மற்றும் மோசமாக நிர்வகிக்கப்படும் உள்கட்டமைப்பைச் சுற்றியே உள்ளன.

    இதன் விளைவாக 2015 சென்னை வெள்ளத்தின் போது கசிவுகள், அடைக்கப்பட்ட வடிகால், நகரின் வடிகால் நிரம்பி வழிந்ததால், கழிவுநீர் அமைப்புகளை தண்ணீரில் மூழ்கடித்ததால், அது விரைவில் திறந்தவெளி சாக்கடையாக மாறியது. இது சென்னையில் பல தசாப்தங்களாக இருக்கும் பிரச்சினைகள் ஆகும். சென்னை நகரம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று பிளாஸ்டிக் மாசுபாடு.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.4 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. ஒரு நாளைக்கு 429 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்து நாட்டிலேயே சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுநீர் வடிகால் மற்றும் சாக்கடைகளை அடைப்பதால், கனமழையின் போது வெள்ளம் எங்கும் செல்ல முடியாமல் தெருக்களில் தண்ணீர் தேங்குகிறது. பிளாஸ்டிக் மாசுபாடு, பிரச்சனைக்கு எவ்வாறு பங்களிக்கிறது, உள்ளூர் மட்டத்தில் அதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு தொடங்குவது அவசியம்.

     

    தற்போதைய நிலையில் தமிழகத்தின் சில தென் மாவட்டங்களிலும் வெள்ள நீர் நிரம்பி, மக்கள் அவதிப்படும் நிலை பார்க்க முடிகிறது. இனி வரும் காலங்களில் பதிப்புகள் குறைவாக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    தலைநகரம் மாநிலத்தின் மத்திய இடத்தில் இருக்க வேண்டும். திருச்சி தலைமையகத்துக்கு சரியாக இருக்கும் என்றார் தி.மு.க. அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான துறைமுருகன். நகர திட்டமிடலுக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

    வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    அந்த வகையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதே போன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

    • தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தி.மு.க. அரசு முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு தி.மு.க. அரசுதான்.

    புயல் மழைக்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    5 நாட்கள் கடந்த பின்பும் தற்போது வரை பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை.

    வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தி.மு.க. அரசு அலட்சியப்படுத்தியதால் தான் கடும் பாதிப்பு.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவேண்டும்.

    தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த தேவையான ராட்சத மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தி.மு.க. அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மழைக்காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.

    2015-ம் ஆண்டு புயல் பாதிப்பை அ.தி.மு.க. அரசு திறமையாக சமாளித்தது.

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிண்டி ரேஸ் கோர்சில் நடந்துவந்த தனியார் கட்டுமான பகுதியில் சுமார் 50 அடிக்கும் அதிகமாக திடீர் பள்ளம் ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்தது.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. வெள்ள பாதிப்புகளில் பெருமளவு பாதிக்கப்பட்ட சென்னை அதில் இருந்து மெல்ல மீளத் தொடங்கி இருக்கிறது.

    கடந்த திங்கட்கிழமை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் சுமார் 50 அடிக்கும் அதிகமாக திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரமும் விழுந்ததாக கூறப்பட்டது. இதில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த சிலர் சிக்கிக் கொண்டனர். திடீர் பள்ளத்தில் விழுந்த 8 பேரில் 6 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

    கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜெயசீலன் கண்டெய்னர் உடன் தண்ணீருக்குள் மூழ்கினார். இவருடன் மேலும் சிலர் மூழ்கி இருக்கலாம் என கூறப்பட்டது. பெரும் பள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஜெயசீலன் மற்றும் சிலரை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே, பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் சிக்கிய மற்றவரின் உடலை தேடும் பணி நடந்து வந்தது.

    இந்நிலையில், பள்ளத்தில் சிக்கியவர்களில் மேலும் ஒருவரின் சடலத்தை அதிகாரிகள் மீட்டனர். ராட்சத கிரேன் மூலம் இரும்புப் பெட்டியில் வைத்து அவரது உடல் மேலே கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்ட உடல் அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியானது. அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த சிலர் சிக்கிக் கொண்டனர்.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. வெள்ள பாதிப்புகளில் பெருமளவு பாதிக்கப்பட்ட சென்னை அதில் இருந்து மெல்ல மீள தொடங்கி இருக்கிறது.

    கடந்த திங்கள் கிழமை அன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் சுமார் 50 அடிக்கும் அதிகமாக திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரமும் விழுந்ததாக கூறப்பட்டது. இதில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த சிலர் சிக்கிக் கொண்டனர்.

     


    கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜெயசீலன் கண்டெய்னர் உடன் தண்ணீருக்குள் மூழ்கினார். இவருடன் மேலும் சிலர் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. பெரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஜெயசீலன் மற்றும் சிலரை மீட்கும் பணிகள் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் சிக்கிய மற்றவரின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தின் மீட்பு பணிகளில் எல் அண்ட் டி, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

    • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
    • தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவு.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி நாளை (டிசம்பர் 08) சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆறு தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 11-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கு முன் தூய்மை, மின் இணைப்பு என தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

    • கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை.
    • பள்ளிக்கு வர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

    மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ள பாதிப்பு காரணமாக நான்கு மாவட்டங்களில் பெரும்பாலான தாலுகாக்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அந்த வரிசையில், சென்னையில் நாளை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மழை பாதிப்புகளை தொடர்ந்து பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.

    பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும். கட்டங்களின் மேற்கூரைகள் சுத்தம் செய்யப்பட்டு மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உரிய தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பள்ளிகளை திறப்பதற்கு முன் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் புத்தகம், சீருடை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • மிச்சாங் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
    • தற்போது மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மரங்கள் அகற்றும் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    • தமிழகத்திற்கு வெள்ளத்தடுப்பு திட்டத்திற்காக முதல் தவணையாக இதே தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு 493.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.

    லட்சக்கணக்கான வீடுகள் இன்னும் தண்ணீருக்குள் உள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக பாதிப்பை சந்தித்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்துள்ளன.

    பால், குடிநீர் பற்றாக் குறையால் மக்களிடம் கடும் தவிப்பு நிலவுகிறது. வாகனப் போக்குவரத்து இன்று முதல் 90 சதவீதம் இயங்கத் தொடங்கியுள்ளது.

    பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிகமான மழை பெய்ததாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

    எனவே தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அதில் உதவி கேட்டிருந்தார்.

    இந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புயல் சேத விவரங்களை கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

    மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணையில் மத்திய அரசின் பங்கான ரூ.450 கோடியை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    மிச்சாங் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் வேறுபட்டாலும் இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநில அரசுகளுக்கு உதவ பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணை தொகையை முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்துக்கு ரூ.450 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த இரு மாநிலங்களுக்கும் ஏற்கனவே முதல் தவணை தொகை வழங்கப்பட்டு உள்ளது. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

    விரைவில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இதேபோல் முதல் முறையாக சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமித்ஷா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடந்த 8 ஆண்டுகளில் 3-வது பெரிய வெள்ளத்தை எதிர் கொண்டு உள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு தேசிய பேரிடர் தடுப்பு நிதியத்தின் கீழ் சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள நடவடிக்கைகளுக்கு ரூ.561.29 கோடி ஒதுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இதில் மத்திய அரசு உதவியாக ரூ.500 கோடி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சென்னை மழை வெள்ளத்தை சமாளிக்க கூடியதாக மாற உதவும். நகர்ப்புற வெள்ளத் தடுப்பு முயற்சியில் இது முதன்மையானது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    மாநில பேரிடர் நிதியின் கீழ் ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நகர்புற வெள்ள தடுப்பு நிதியாக ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் மத்திய அரசு ரூ.1011.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×