என் மலர்
நீங்கள் தேடியது "காற்றழுத்த தாழ்வு பகுதி"
- காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது
- 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு இலங்கை கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு இலங்கை மற்றும் அதையொட்டிய மன்னார் பகுதிகளில் நிலவி வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு இலங்கை கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு இலங்கை மற்றும் அதையொட்டிய மன்னார் பகுதிகளில் நிலவி வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தாழ்வு மண்டலமாக தெற்கு இலங்கையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.
- தமிழ்நாட்டிற்கு நேரடியாக எந் பாதிப்பும் இருக்காது என்று சொல்லப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கட பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு இலங்கையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிற்கு நேரடியாக எந் பாதிப்பும் இருக்காது என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில், தெற்கு இலங்கையில் கரையை கடக்கும் என சொல்லப்பட்ட நிலையில், தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் பயணித்து வட இலங்கை- டெல்டா கடற்பகுதி நோக்கி அடுத்த 36 மணி நேரத்தில் நகரும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கண்டித்துள்ளார்.
இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளது என்றும் ஜனவரி 9 முதல் 12 வரை விவசாயிகள் வேளாண் பணிகளை ஒத்திவைத்து, தானியங்களை பத்திரப்படுத்துமாறு டெல்டா விவசாயிகளுக்கு ஹேமச்சந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
- இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலையொட்டிய பகுதிகளில் உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றத்தழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று அதிகாலை வலுவடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
- மீனவர்கள் வரும் 28-ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.
குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் இன்று புதிதாக உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக கணிப்பு.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் எனவும் அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் வரும் 28-ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
- மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது.
சென்னை:
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதன்பிறகு வங்கக்கடலில் உருவான 'மோன்தா' புயலனாது ஒரிசா அருகே கரையை கடந்ததால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழைக்கு வாய்ப்பில்லாமல் போனது.
இதனை தொடர்ந்து நேற்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலின் நகர்வை பொறுத்து தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
- காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் வலுப்பெறக்கூடும்.
- வடகடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் வலுப்பெறக்கூடும்.
இதன்பின்பே, இது புயலாக வலுப்பெறுமா? புயலாக வலுப்பெறும் பட்சத்தில் எந்த இடத்தில் கரையைக் கடக்கக்கூடும் என்பதை அதன் நகர்வுகளை பொறுத்து அமையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில், வட தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடிய 24-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாட்டில் இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும்.
- காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வால், தமிழ்நாட்டில் இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளையும், நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
24-ந்தேதி (திங்கட்கிழமை) கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
- வருகிற 14-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.
- வருகிற 19-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதன்பிறகு உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இதையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மோன்தா புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 14-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்.
இதனை தொடர்ந்து, வருகிற 19-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணி அளவில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேலும், கிழக்கு-வடகிழக்கு திசையில், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக, தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மகாராஷ்டிரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறையக்கூடும்.
தெற்கு மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இன்று 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது.
- வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு உருவானது.
சென்னை:
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியது. இது திங்கட்கிழமை ஆந்திராவில் கரையை கடந்தது.
தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரா நோக்கி போனதால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் வரை தமிழகத்தின் வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
இந்த பருவமழை காலத்தின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி மூலம் இயல்பை விட கூடுதலாகவே மழை கிடைத்தது. வட மாவட்டங்களில் அதிக மழையை எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றத்துடன் கடந்து சென்றது.
இந்த நிலையில் இன்று 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது. வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு உருவானது. இது வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வட கிழக்கு நோக்கி, கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு ஜார்க்கண்ட் வழியாக பீகாரை நோக்கி நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் படிப்படியாக பலவீனம் அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மெதுவாக வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று காலையில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து பின்னர் படிப்படியாக பலவீனம் அடையும் என்று தெரிவித்துள்ளது.
புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
- அக்டோபர் 25ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 25ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அக்டோபர் 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 27ம் தேதி அன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.






