என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
    X

    வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    • கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
    • மீனவர்கள் வரும் 28-ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.

    குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் இன்று புதிதாக உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக கணிப்பு.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் எனவும் அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் வரும் 28-ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    Next Story
    ×