என் மலர்
Cyclone News in Tamil | சைக்ளோன் செய்திகள் - Maalaimalar
- ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
- கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பால் இலங்கை அரசு தற்போது அவசரநிலையை அறிவித்துள்ளது.
- இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
- ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 191 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன.
- டிட்வா புயலால் மயிலாடுதுறையில் 140-220 மிமீ மழை பெய்துள்ளது.
- தஞ்சாவூர் மற்றும் திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் நல்ல மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிழந்துவிட்டது. மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது. டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. டிட்வா புயலால் மயிலாடுதுறையில் 140-220 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இன்று மாலை சென்னையை நெருங்கும்போது புயலின் சுழற்சியால் மீண்டும் மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
- டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் உள்ளது
- டிட்வா புயலின் நகரும் வேகம் 7 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டராக குறைந்துள்ளது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ தூரத்தில் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், டிட்வா புயலின் நகரும் வேகம் 7 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டராக குறைந்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
- சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றம்.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் எதிரொலியால் புதுச்சேரி துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
- மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி டிட்வா புயல் நகரும்.
- புயலின் காரணமாக மழையின் அளவு இயல்பைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா கூறியதாவது:-
சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி டிட்வா புயல் நகரும்.
வரும் 27, 28-ல் கடலோர தமிழகம், புதுவை, காரைக்காலில் அதிகபட்சமாக மணிக்கு 40-50 கி.மீ.வரை தரைக்காற்று வீசும்.
புயலின் காரணமாக மழையின் அளவு இயல்பைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இப்போதைக்கு புயலாக இருந்தாலும் நகர்வை பொருத்துதான் மழை எங்கு, எவ்வளவு பெய்யும் என்பது தெரியும்.
இருப்பினும், நாளை மறுநாள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது.
- புயல் உருவானதால் இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று நள்ளிரவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.
தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது.
இந்த புயலுக்கு 'டிட்வா' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் அதற்கடுத்த 48 மணிநேரத்தில் (29-ந்தேதி) வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை அதிகாரி செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் வடகடலோர தமிழக மாவட்டங்களாகும்.
புயல் உருவானதால் இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
29-ந்தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யும்.
சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
30-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 1-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.
- தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.
- சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது. ஏரி, குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் மலாக்கா ஜலசக்தி பகுதியில் புயல் உருவானது. இது இந்தோனேசியாவில் கரையை கடந்தது. அதன் பின்னர் இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து மலாக்கா ஜலசக்தி பகுதியில் நிலவுகிறது.
இது கிழக்கு தென்கிழக்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். அது படிப்படியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று நள்ளிரவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.
தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு 'டிட்வா' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் அதற்கடுத்த 48 மணிநேரத்தில் (29-ந்தேதி) வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை அதிகாரி செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் வடகடலோர தமிழக மாவட்டங்களாகும்.
புயல் உருவாவதால் இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
29-ந்தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யும்.
சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
30-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 1-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.
- தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
- சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது
மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது. சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் தாழ்வுப் பகுதி நவம்பர் 29ம் தேதி புயலாக மாறக்கூடும் என வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் 'டிட்வா' என பெயரிடப்படும் என்றும் டிட்வா புயலால் தமிழகத்திற்கு நவம்பர் 29,30ம் தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.
- இந்திய கடல் பகுதிகளில் மூன்று சுழற்சிகள் ஒன்றாக காணப்படுகின்றன.
- கடந்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருந்தது.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை ஆறிக்கை குறித்து வானிலை மைய இயக்குநர் அமுதா பேட்டி அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்திய கடல் பகுதிகளில் மூன்று சுழற்சிகள் ஒன்றாக காணப்படுகின்றன. குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இதனால், மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும், தமிழகம், கேரள கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
வடகிழக்கு பருவமழை இயல்பில் இருந்து 5 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. 4 இடங்களில் அதி கனமழை, 76 இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது.
கடந்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது.
சென்னை:
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதன்பிறகு வங்கக்கடலில் உருவான 'மோன்தா' புயலனாது ஒரிசா அருகே கரையை கடந்ததால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழைக்கு வாய்ப்பில்லாமல் போனது.
இதனை தொடர்ந்து நேற்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலின் நகர்வை பொறுத்து தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
- ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகில் கரையைக் கடந்தது.
- துரித செயல்பாடுகள் மூலம் உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மோன்தா புயலின் பாதிப்பால், ஆந்திரப் பிரதேசத்துக்கு குறைந்தது ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி இரவு ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகில் கரையைக் கடந்தது.
இந்தப் புயலால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, மோன்தா புயலால் சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறைக்கு ரூ. 2,079 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கு ரூ.829 கோடியும், மீனவளத் துறைக்கு ரூ.1,270 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் இன்னும் நெல் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால், சேதத்தின் முழுமையான இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.
எனினும், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் துரித செயல்பாடுகள் மூலம் உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.






