என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு வெதர்மேன்"

    • தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
    • சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது

    மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது. சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் தாழ்வுப் பகுதி நவம்பர் 29ம் தேதி புயலாக மாறக்கூடும் என வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் 'டிட்வா' என பெயரிடப்படும் என்றும் டிட்வா புயலால் தமிழகத்திற்கு நவம்பர் 29,30ம் தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.

    • சென்னையில் அதிகபட்சமாக 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
    • மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக நிகழும் அரிதான வெப்பச்சலன இடிமழை இருக்கும்.

    வழக்கமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்க வேண்டிய நவம்பர் மாதத் தொடக்கத்திலேயே, தமிழ்நாட்டில் வெப்பநிலை நேர்மாராக உயர்ந்து காணப்படுகிறது.

    காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றமே இந்த அதிக வெப்பத்திற்குக் காரணம் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதத்தில் இந்த அளவு வெப்பம் நிலவியது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

    இன்று (நவம்பர் 2) சென்னையில் அதிகபட்சமாக 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இது நவம்பரின் 2வது வெப்பமான நாளாகும். முன்னதாக நேற்று சென்னையில் 35.5 டிகிரி செல்சியல்ஸ் வெப்பம் பதிவானது. இன்று அதிகபட்சமாக மதுரையில் 37.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

    இதற்கிடையே நாளை தமிழகத்திற்கு மற்றொரு வெப்பமான நாள் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    கணிப்புப்படி, நவம்பர் 3 முதல் 6 ஆம் தேதி வரை மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட சில இடங்களில் ஆங்காங்கே மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக  அரிதான வெப்பச்சலன இடிமழை பெய்யலாம்.

    மற்ற இடங்களில் நாளை வறண்ட வானிலேயே காணப்படும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.   

    • வழக்கமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்க வேண்டிய நவம்பர் மாதத் தொடக்கத்தில் வெப்பம் அதிகரித்துள்ளது.
    • இது முந்தைய காலங்களில் இல்லாத சாதனை அளவாகும்.

    வழக்கமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்க வேண்டிய நவம்பர் மாதத் தொடக்கத்திலேயே, தமிழ்நாட்டில் வெப்பநிலை நேர்மாராக உயர்ந்து காணப்படுகிறது.

    காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றமே இந்த அதிக வெப்பத்திற்குக் காரணம் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    இன்று, சென்னையில் அதிகபட்சமாக 35.5 செல்ஸியஸ் வெப்பம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய காலங்களில் நவம்பர் 1 அன்று இல்லாத இல்லாத சாதனை அளவாகும்.

    வெப்பநிலை உயர்ந்தபோதிலும் மழைக்காக அறிகுறிகளையும் வெதர்மேன் கணித்துள்ளார்.

    அதன்படி, வருகின்ற நவம்பர் 3 முதல் 6 ஆம் தேதி வரை மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை உட்படத் தமிழ்நாட்டில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யுமாம்.

    மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக நிகழும் அரிதான வெப்பச்சலன இடிமழை ஆக அது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

    • அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேலும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே, வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைக்கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    சாலைகள் எங்கும் மழை நீர் தேங்கி நிற்கிறது. பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன.

    இந்நிலையில், சென்னையில் தற்போது பெய்து வரும் மழை அனேகமாக கடைசி மழையாக இருக்கும். இனி மழை குறையத் துவங்கி முழுமையாக நிற்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    ×