தீவிரமடைய போகும் வடகிழக்கு பருவமழை- அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி

வருகிற 14-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. வருகிற 19-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.
தீவிரமடைய போகும் வடகிழக்கு பருவமழை- அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதன்பிறகு உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இதையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மோன்தா புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வருகிற 14-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்.

இதனை தொடர்ந்து, வருகிற 19-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com