search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "low pressure"

    • நவம்பர் 29- ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகின்றது.

    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (27 ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29- ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வேப்பூர், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது நேற்று இரவு இடி மின்னலுடன் பெய்த வந்த நிலையில் கனமழையாக மாறியது. இதனை தொடர்ந்து விடிய விடிய மழை தொடர்ந்து வந்த நிலையில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 17 சென்டி மீட்டர், லால்பேட்டை பகுதியில் 11 சென்டி மீட்டர், கொத்தவாச்சாரி 10.9 சென்டிமீட்டர், ஸ்ரீமுஷ்ணத்தில் 10.7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வந்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதோடு குடியிருப்பு பகுதிகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்பட்டு வருகின்றது. மேலும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்த காரணத்தினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகின்றது. இந்த மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருப்பதோடு தண்ணீர் சூழ்ந்தால் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மில்லி மீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு- 

    சேத்தியாதோப்பு - 168.4,லால்பேட்டை - 110.0,கொத்தவாச்சேரி - 109.0, ஸ்ரீமுஷ்ணம், - 107.1,புவனகிரி - 88.0, காட்டுமன்னார்கோவில் - 87.0, வேப்பூர் - 85.0,கலெக்டர் அலுவலகம் - 77.4, பரங்கிப்பேட்டை - 76.8, பெல்லாந்துறை - 74.5,கடலூர் - 69.5, குறிஞ்சிப்பாடி - 66.0,கீழ்செருவாய் - 64.0, சிதம்பரம் - 63.1,வடக்குத்து - 63.0, அண்ணாமலைநகர் - 58.0,தொழுதூர் - 58.0, லக்கூர் - 52.3, விருத்தா சலம் - 50.2,குப்பநத்தம் - 46.4, காட்டுமயிலூர் - 45.0,எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 40.0, மீ-மாத்தூர் - 38.0, வானமாதேவி - 30.6, பண்ருட்டி - 16.௦  மாவட்டத்தில் மொத்தம் 1,743.30 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    • தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வரும் நிலையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாகவே இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் அந்த மான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வருகிற 29-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 29-ந் தேதி அன்று தாழ்வு மண்டலமாக மாறுவதால அன்று தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நாளை உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, அது தாழ்வு மண்டலமாக மாறிய பிறகே தெரியவரும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும். தமிழக பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நகர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
    • கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (14-ந்தேதி) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    நாளை (14-ந்தேதி) மற்றும் 15-ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

    ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அக்னி வெயில் முடிவடைந்த பின்னரும் கோடை வெப்பம் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்தியது.
    • குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மைய தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்ததும் ஜூன் முதல் தேதியே தென் மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அக்கினி வெயில் முடிவடைந்த பின்னரும் கோடை வெப்பம் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்தியது.

    இதனால் தென்மேற்கு பருவமழை தள்ளிப்போகும் நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளது.

    அதன்படி ஜூன் 8-ந் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிகுறிகள் லட்சத்தீவு, நிக்கோபார், அரபிக்கடலில் காற்று வீசுவதில் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இது மேலும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இதன்மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • மீனவர்கள் உடனே கரை திரும்பவேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    • துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடலூர், நவ.22-

    வங்ககடலில் குறைந்த காற்றழுத்தம் வலுவிழந்து ள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் சுமார் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவ ர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். நெடுங்கடல் தூரத்தில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனே கரை திரும்பவேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்து றை அதிகாரிகள் 49 மீனவ கிராமங்களுக்கும் எச்சரி க்கை அறிவிப்பு விடுத்து ள்ளனர். இதனைத்தொ டர்ந்து கடலூர் மாவட்ட த்தில் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று காலை யும் அவர்கள் வீட்டி லேயே முடங்கினர். இதனால் துறைமுக பகுதி யில் படகுகள் ஓய்வெடு த்தன. வானிலை ஆய்வு மையம் அறிவித்தப்படி கடலில் சீற்றம் அதிகம் உள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை அறிவித்தப்படி இன்று காலை முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கடலூர் நகர் பகுதியான திருப்பாதிரிபுலியூர், மஞ்ச க்குப்பம், செம்மண்டலம், பாதிரிகுப்பம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அலு வலகம், பள்ளிக்கு செல்வோர் குடைபிடித்தப்படி சென்றதை காண முடிந்தது.

    • மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும்.

    தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #TNRain #RedAlert #IMD #CycloneFani
    சென்னை:

    இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், பின்னர் புயலாக மாறி  30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான பகுதியாக மாறியுள்ளது. புயல் உருவானால் வட தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு  மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



    புயல் சின்னம் காரணமாக இன்றும் நாளையும் மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.  இரு நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் ரெட் அலர்ட் என்பது, கனமழைக்கான எச்சரிக்கை மட்டும்தான், அதுவும் மாறுபாட்டிற்கு உட்பட்டது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #TNRain #RedAlert #IMD #CycloneFani
    இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், அது புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. #IMD #TNRains #CycloneFani
    சென்னை:

    தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல்-வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாவும், பின்னர் அது வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

    அதன்படி இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    ‘இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயலாக மாறினால் அதற்கு ஃபனி என பெயரிடப்படும். இந்த புயல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது’ எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. #IMD #TNRains #CycloneFani
    தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக 12-ந்தேதி முதல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. #Rain #Coastalarea
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவானது.

    அந்த காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் நேற்று மாலை நிலைகொண்டு இருந்தது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் தொடர்ந்து கண்காணித்து தகவலை வெளியிட்டு வருகிறார்கள். இன்று காலை வெளியிட்ட தகவல்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

    சற்று வலு அதிகரித்து இருப்பதால் அந்த தாழ்வு மண்டலம் தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கி இருக்கிறது. இன்னும் 48 மணி நேரத்தில் அது அந்தமானை கடந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் அது புயல் சின்னமாக மாறும் என்று கணித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக புயல் சின்னம் தமிழக கடலோரத்தை நெருங்கி வர வாய்ப்பு உள்ளது.

    12-ந்தேதிதான் புயல் சின்னத்தின் நகர்வை பொறுத்து அது கடலோரத்தில் எங்கு கரையை கடக்கும் என்பது தெரியவரும். தற்போதைய கணிப்பின்படி வட தமிழ்நாட்டில் அந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தினர் கருதுகிறார்கள்.

    இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு ஆசிய நாடுகள் பெயர் சூட்டி வருகின்றன. அதன்படி இந்த புயலுக்கு “பெய்ட்டி” என்று பெயர் சூட்டப்படும். இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கி உள்ளது.



    சமீபத்தில்தான் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்து விட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் பெய்ட்டியும் வந்து வட தமிழ்நாட்டில் பெயர்த்து எடுத்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் 2 நாட்களுக்கு பிறகு அதாவது 12-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    12-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கணிசமான அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக 12-ந்தேதி முதல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்து இருப்பதால் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    பெய்ட்டி புயல் சென்னை அருகே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் 12-ந்தேதி புயல் சின்னம் உருவான பிறகே அதன் நகர்வு திசையை துல்லியமாக கணிக்க முடியும். எனவே தமிழக கடலோரத்தில் புதிய புயல் எந்த பக்கம் தாவும் என்பது 12-ந்தேதி தெரிய வரும். #Rain #Coastalarea

    தென்கிழக்கு வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு உருவாகுவதால் நாளை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD #Rain #Bayofbengal
    சென்னை:

    வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சிகள் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

    நேற்று குமரி முதல் தெற்கு ஆந்திரா வரையிலான தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகம் புதுவையில் பரவலாக மிதமான மழை பெய்து வருகி றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரையின் உள் பகுதிக்கு நகர்ந்து சென்று விட்டது.

    இதனால் இன்று கடலோர பகுதிகளில் மழை குறைந்து உள் பகுதிகளில் மழை நீடிக்கிறது.



    இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகிறது. முதலாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாளை (6-ந்தேதி) உருவாகிறது.

    இதன் காரணமாக நாளை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9-ந்தேதி உருவாகிறது.

    முதலாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் பகுதியையொட்டியே 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகிறது. இரண்டும் தென்கிழக்கு வங்கக்கடலில் அருகருகே நிலைகொண்டு இருக்கும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து மழையை எதிர்பார்க்கலாம் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    தற்போது குமரி கடல் முதல் மேற்கு மத்திய வங்கக்கடல் வரையிலும், மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரத்தையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் வரை மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #IMD #Rain #Bayofbengal

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து நகர்வதால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRains #NEMonsoon
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக  தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் இந்த வாரம் பரவலாக மழை பெய்தது. அது தற்போது வலுவிழந்து தமிழகத்தின் உள்மாவட்டங்களை நோக்கி நகர்கிறது.

    இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கும்.

    இதன் காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணமலை, வேலூர், சேலம், கரூர், ஈரோடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர், திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் பகுதியில் 11 செமீ மழையும், பொன்னேரியில் 10 செமீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னை வடக்கு, டிஜிபி அலுவலகம், மரக்காணம், திண்டிவனம் மற்றும் பண்ருட்டியில் 9 செமீ, தாமரைப்பாக்கம், நெய்வேலியில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 17 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் 45 சதவீதம் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNRains #NEMonsoon
    ×