search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weather centre"

    அந்தமான் கடல் பகுதியில் தென்பட்ட அறிகுறிகளை வைத்து கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது கோடை வெயில் வாட்டுகிறது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வாட்டி வதைத்த வெயில் கடந்த 4-ந்தேதி முதல் மேலும் அதிகரித்தது. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி பதிவானது.

    வழக்கமாக கோடையில் கோடை மழை பெய்யும். இம்முறை எதிர்பார்த்த அளவுக்கு கோடை மழை பெய்யவில்லை. அக்னி நட்சத்திரமும் வருகிற 29-ந்தேதி முடிகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம்.

    தென்மேற்கு பருவமழை கேரளாவின் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இருந்து தொடங்கும். அங்கிருந்து வீசும் காற்றும், மழை மேகமும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியை காட்டும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் அந்தமான் கடல் பகுதியில் நேற்று தென்பட்டது. என்றாலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல்வாரத்திலேயே தொடங்கும் என்று கேரள வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


    தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று மழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கின. இது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சகுனம் என்று வானிலை ஆய்வு மையம் கருதுகிறது.

    ஜூன் 4-ந்தேதி முதல் 6-ந்தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இதன் மூலம் இந்தியாவின் தென்மாநிலங்களில் மழை பொழிவு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் போது தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் மழை பெய்யும். குறிப்பாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்யும் முன்பே வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த ஓரிரு நாட்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
    கடலோர மாவட்டங்களை தவிர தமிழகத்தில் உள் மாவட்டங்களில் 3 நாட்கள் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது.

    இந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் உள் மாவட்டங்களில் 3 நாட்கள் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த அனல் காற்று 3 நாட்களுக்கு வீச வாய்ப்பு உள்ளது.


    வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் அது அனல் காற்றாக மாறி வீசக்கூடும். இயல்பைவிட 5 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அனல் காற்று இருக்காது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதியில் லேசான மழை பெய்யக் கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அனல் காற்று வீசுவதால் பொது மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்கலாம். வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்து செல்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

    சிறு குழந்தைகள், பெரியவர்கள் பகலில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
    வங்கக் கடலில் உருவான பானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #CycloneFani #Fani #TNRains
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் பானி புயலாக மாறியது. இந்த புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என்றும் வானிலை மையம் தெரிவித்தது. 

    இந்நிலையில்,  சென்னை வானிலை மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    பானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் தமிழகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை.

    வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ம் தேதி வடதமிழகத்தின் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் 300 கி.மீ. தொலைவில் நகரும். பானி புயல் கரையை நெருங்கி வரும் நேரத்தில் வட தமிழகம், சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். #CycloneFani #Fani #TNRains
    வங்கக் கடலில் உருவான பானி புயல், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. #CycloneFani #Fani #TNRains
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இன்னும் 12 மணி நேரத்தில் பானி புயலாக மாறும் என தெரிவித்திருந்தது.



    இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் பானி புயலாக மாறியது. இந்த புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என்றும் தெரிகிறது. பானி புயல் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற கூடும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #CycloneFani #Fani #TNRains 
    வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் பானி புயல் உருவாகும் என்றும், 30ம் தேதி தமிழகத்தை நெருங்கும்போது மணிக்கு 145 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. #CycloneFani #TNRains
    புதுடெல்லி:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் அடுத்த நகர்வைப் பொருத்து, எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் துல்லியமாக தெரிவிக்கும்.

    இந்நிலையில், இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இன்றும் 12 மணி நேரத்தில் பானி புயலாக மாறும் என தெரிவித்துள்ளது.

    “சென்னைக்கு தென்கிழக்கில் 1210 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 20 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் பானி புயலாக வலுப்பெறும். இந்த புயல் வரும் 30-ம் தேதி மாலை வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரையை நெருங்கும். புயல் கரையை நெருங்கும்போது, மணிக்கு 120 முதல் 145 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது” என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. #CycloneFani #TNRains
    வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. #IMD #CycloneFani #Depression
    சென்னை:

    இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்போது ‘ஃபானி புயல்’ என பெயரிடப்படும். இந்த பெயரை வங்காளதேசம் பரிந்துரைத்துள்ளது.

    இதற்கிடையே வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது கிழக்கு இந்தியப் பெருங்கடல், தென்கிழக்கு வங்கக் கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

    இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறி இலங்கை வழியாக 30-ம் தேதி வடதமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இன்னும் 4 நாட்களில் இந்த புயல் வடதமிழகத்தை நெருங்கும் என கூறப்பட்டுள்ளது. #IMD #CycloneFani #Depression
    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #TNRain #RedAlert #IMD #CycloneFani
    சென்னை:

    இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், பின்னர் புயலாக மாறி  30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான பகுதியாக மாறியுள்ளது. புயல் உருவானால் வட தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு  மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



    புயல் சின்னம் காரணமாக இன்றும் நாளையும் மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.  இரு நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் ரெட் அலர்ட் என்பது, கனமழைக்கான எச்சரிக்கை மட்டும்தான், அதுவும் மாறுபாட்டிற்கு உட்பட்டது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #TNRain #RedAlert #IMD #CycloneFani
    தமிழகம், புதுவையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #TNRains #chennaiRains #IMD
    சென்னை:

    தென் மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

    சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை கொட்டியது. இதே போல் காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தமிழகம், புதுவையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தாவது:-

    குமரி கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை தமிழக கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.


    இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம்-புதுவையில் கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

    அதிகபட்சமாக பொன்னேரியில் 13 செ.மீ. மழையும், சோழவரத்தில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    அடுத்த 2 நாட்களை பொறுத்தவரை தமிழகம்- புதுவையில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்களில் கனமழையும் நீடிக்கும்.

    சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும், ஒருசில நேரங்களில் கனமழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNRains #chennaiRain #IMD
    அடுத்த 24 மணி நேரத்திற்குள் டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain #DeltaDistrict #IMD
    சென்னை:

    தமிழக கடலோர பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தரை பகுதிக்குள் நகர்ந்து வலு இழந்தது.

    இதனால் உள் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாகவும், சில சமயம் கன மழையும் பெய்து வருகிறது.

    வலு இழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலுக்கு சென்று மேலடுக்கு சுழற்சியாக பரவி உள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள குமரி கடல் பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.


    இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. #ChennaiRain #DeltaDistrict #IMD
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந்தேதி தமிழகத்தில் தொடங்கி பரவலாக பெய்தது. தீபாவளிக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்களாக மழை இல்லை.

    இந்த நிலையில் நேற்று இலங்கையையொட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இந்தியப் பெருங்கடல் மற்றும் குமரி கடல் பகுதிவரை பரவி இருந்தது.

    அது இன்று வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு திசையில் கன்னியாகுமரி நோக்கி நகர்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் கன்னியாகுமரியை கடந்து செல்லும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்.


    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரம், ராமநாதபுரம், பாம்பன், இரணியல், திருச்செந்தூர், தூத்துக்குடி, குளச்சல், ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இதேபோல் அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் (9-ந்தேதி) புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #IMD #HeavyRain
    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதால் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain
    சென்னை:

    தெற்கு மேற்கு பருவமழை இம்மாதம் 21-ந் தேதி முற்றிலும் வாபஸ் ஆனதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வங்க கடலில் உருவான புயல்கள் ஈரப்பதத்தை உறிஞ்சியதால் காற்றின் போக்கு மாறியது. இதனால் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த 26-ந் தேதி முதல் பருவ காற்று வீச தொடங்கிய நிலையில் மழை பெய்யத் தொடங்கவில்லை.

    இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் இருந்து வடக்கு வங்க கடல் வரை குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது.

    இதேபோல் இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    மேலும் மேற்கு மத்திய மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதியிலும், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதையடுத்து நாளை காலை முதல் 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான தூறலுடன் மழை தொடங்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.


    கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவிய சென்னையில் நேற்று காலை பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை தூறியது. மாலை, இரவிலும் விடிய விடிய மழை தூறியது.

    இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு இதமான குளிர் நிலவுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அடுத்த 2 நாட்களுக்கு படிப்படியாக மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 9 தமிழக மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் அதிகபட்சமாக 11 செ.மீ. வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  #IMD #TNRain
    வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRain #WeatherCentre
    சென்னை:

    தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அதிகாரி இன்று கூறியதாவது:-

    இலங்கையை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியிலும், தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியிலும் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.


    இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரம், வானூர் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், அனைக்காரன் புதூர் 8 செ.மீட்டரும், பேச்சிப்பாறை, சத்தியமங்கலம், பாபநாசம், மரணக்காணம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.  #TNRain #WeatherCentre
    ×