search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Storm warning"

    • புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு.
    • இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒருசில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதில் குறிப்பாக மாநிலத்தில் இன்றும் நாளையும் கனமழையும், 23-ந்தேதி மிக கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த சில நாட்களாக கேளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது. மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் மொத்தம் 9 குழுக்கள் கேரளா வந்திருக்கின்றன.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் 4-வது பட்டாலியன் கமாண்டன்ட் தெரிவித்திருக்கிறார்.

    மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்வ

    தற்காக தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் கேரளாவில் அவசர கால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டி ருக்கிறது. அந்த அறை அரக்கோணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.
    • பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கடலில் பலத்த காற்று வீசும் மற்றும் கடல் சீற்றமாக காணப்படும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.

    அதேபோல், நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் குறைந்த தூரம் சென்று மீன்பிடிக்கும் பைபர் படகுகளும் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.10 லட்சம் மீன் வர்த்தகம் தடைபட்டது. மேலும், பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆறுகாட்டுத்துறை பகுதியில் நேற்று கடல் சீற்றம் தணிந்ததால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடித்து கரை திரும்பும் இந்த பைபர் படகு மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்கள் சிக்கினாலும், மீன்பிடி தடைக்காலம் என்பதால் அந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றுள்ளனர்.

    • வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.
    • வங்கக்கடலில் தூரத்தில் புயல் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.

    இது புயலாக மாறினால் ரீமேக் என புயலுக்கு பெயர் சூட்ட உள்ளனர். புயலாக வலுப்பெற்ற பின் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை நோக்கிச் செல்லும். வருகிற 26-ந் தேதி மேற்கு வங்கக் கடற்கரை பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதில் வங்கக்கடலில் தூரத்தில் புயல் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடலில் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதின்பேரில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

    வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிரப் புயலாக வலுவடையும். 26-ந்தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது.
    • குறைந்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது.

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிக பட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கி டையே இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்ச ரிக்கையும் விடுத்துள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தையொட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் வருகிற 21-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத் தில் மேலும் மழை பெய்யுமா? என்பது தெரிய வரும்.

    இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வங்க கடலில் உருவாகும் குறைந்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி ஹாட் ஸ்பாட்டில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    இந்த மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்தான் வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த வார மும் மழை நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    • குடிசை வீடுகளையும் நேரில் பார்வையிட்டர்

    காவேரிப்பாக்கம்:

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் பனப்பாக்கம் பேரூராட்சியில் தாழ்வான பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டுள்ளதையும், கசக்கால்வாய் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கலெக்டர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, பேரூராட்சி செயல் அலுவலர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.
    • 9 துறைமுகங்களில் 2-k; எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    மத்திய மேற்கு வங்கக் கடலில், விசாகப்பட்டனத்திற்கு தென்கிழக்கே சுமார் 220 கி.மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.

    எனவே, தொலை தூரத்தில் புயல் சின்னம் உருவாகி இருப்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில், நாகை துறைமுக அலுவலகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்பொழுது 9 துறைமுகங்களில் தற்போது இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புயல் உருவாகிய உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    • நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    தெற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ஏற்கனவே வானிலை மையம் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என தடை விதித்தனர்.

    இதனால் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், செருதூர், வேதாரணியம், ஆற்காட்டுதுறை உள்ளிட்ட 27 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

    மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி வாழ்வா தாரம் பாதித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

    மீன் வரத்து இல்லாததால் நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது.
    • 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது.

    இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் மிக பலத்த மழை பெய்தது.

    இன்று குறைந்த காற்றழுத்தம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சை, தென்காசி, நெல்லை, ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்ட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது.
    • குறைந்த காற்றழுத்தம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

    வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது.

    இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் மிக பலத்த மழை பெய்தது.

    இன்று அதிகாலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்தம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது புயல் சின்னமாக மாறுவதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடவடிக்கை
    • உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர்கள் அதிரடி உத்தரவு

    வேலூர்:

    அந்தமான் தீவுகள் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறி சென்னை, புதுச்சேரிக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

    இதனால் நாளை முதல் 10-ந் தேதி வரை 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த புயல் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த மழை மூலம் பாதிப்பு ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    ஏற்கனவே அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வந்த கட்டுப்பாட்டு அறைகள் மீண்டும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்கும் பகுயதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள கால்வாய்கள் மீண்டும் தூர்வரப்படுகின்றன.

    இது தவிர மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக முகாம்களை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    வேலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக அனைத்து சாா்பு அலுவலா்களுடனான காணொலி ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    புயல் முன்னெச்சரிக்கை காரணமாக அனைத்து மழை மானிகளையும் அந்தந்த வட்டாட்சியா் தணிக்கை செய்து அவை நல்லமுறையில் இயங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மழைமானிகளின் தினசரி மழை அளவுகளை காலை 8 மணிக்குள் அளிக்க வேண்டும்.

    வேலூர் மாநகரில் தாழ்வான, மழைநீா் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து உடனுக்குடன் மழைநீரை அகற்ற வேண்டும். இதற்குண்டான சாதனங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அருகே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும்.

    சித்தூா் பஸ் நிறுத்தப் பகுதியில் கால்வாயை உடனடியாக தூா்வாரி சீரமைக்க வேண்டும்.

    தொரப்பாடி-அரியூா் சாலையில் நீா் தேங்குவதை சீரமைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தாழ்வான இடங்களில் நீா் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும்.

    அனைத்து அலுவலா்களும் மழைவெள்ள பாதிப்பு தகவல்களை உடனுக்குடன் வேலூா் மாவட்ட பேரிடா் மேலாண்மை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட வேண்டும். மழையால் பயிா்ச் சேதங்கள் ஏற்பட்டால் அவற்றை எந்தவித புகாா்களுக்கும் இடமளிக்காமல் கணக்கெடுப்பு நடத்தி, நிதியுதவி கோரிக்கையை அரசுக்கு அனுப்பிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • கடலில் குறைந்தபட்சம் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
    • தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 28 பேர் அவசர அவசரமாக வருகை தந்துள்ளனர்.

    கடலூர்:

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான நிலையில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். மேலும் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறக்கூடும். புயலாக மாறினால் மாண்டாஸ் என புயலுக்கு பெயர் வைக்கப்பட உள்ளது . இதன் காரணமாக கடலில் குறைந்தபட்சம் 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்து ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 28 பேர் அவசர அவசரமாக வருகை தந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்‌. அதனை மீறி ஒரு சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்றதும் குறிப்பிடத்தக்கது‌.

    மேலும் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள படகுகள் முழுவதும் சுமார் 30 அடி முதல் 50 அடி தூரத்திற்கு முன்னோக்கி பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமத்தில் டிராக்டர்கள் மூலமாக கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளை பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 278 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக்கூடும் என மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் மாவட்ட முழுவதும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 1 - ம் எண் தூர புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது‌. இதன் மூலம் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது. மேலும் குளிர்ந்த காற்று வீசுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×