search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rainfall"

    • இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
    • சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது.

    வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து இருந்தது.

    இன்று அதிகாலை தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில், சென்னை உள்பட பத்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பத்து மாட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
    • நள்ளிரவு முதல் மழை பெய்ததை அடுத்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து இருந்தது.

    அதன்படி நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகள், சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நள்ளிரவு முதல் மழை பெய்ததை அடுத்து சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

    இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாக இருப்பதை ஒட்டி தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    • இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

    வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதைத் தொடர்ந்து, சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    காலை முதலே மழை பெய்து வருவதை அடுத்து சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழக்கம்போல் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

    வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    • காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது.
    • சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரமடைந்து இருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது.

    இதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலைக்குள் தமிழகத்தின் வடமாவட்டங்கள்-தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நெல்லூர் மற்றும் புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடந்தது.

    கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.

    • காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது.
    • சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரமடைந்து இருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது.

    இதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலைக்குள் தமிழகத்தின் வடமாவட்டங்கள்-தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தாழ்வு மண்டலம் இன்று கரையை கடந்தாலும், தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கிறது.
    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

    தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு உருவானது. இது இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் அடுத்த 2 தினங்களுக்கு நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, எழும்பூர், புரசைவாக்கம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்ய துவங்கியுள்ளது.

    இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்ததை அடுத்து, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சென்னையில் காலை முதலே கனமழை பெய்ய துவங்கி இருக்கிறது.

    டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இன்று அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

    • தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு உருவானது. இது இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி நோக்கி நகரும்.

    தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதுதவிர தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இன்று அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    அந்த வகையில், 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • சென்னைக்கு வரும் 16 தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் 16 தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், "சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை வெளுத்து வாங்கும்" என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
    • மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும்.

    தமிழ் நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஸ்டாலினின் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது.

    தமிழகத்தின் தலைநகர் சென்னை தான். ஆனால், சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் இந்த அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது வாரிசு துணை முதலமைச்சர் உதயநிதியும் செயல்பட்டு வருவது, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

    மழை வெள்ள காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வருவாய்த் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்களையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, வாரிசு அடிப்படையில் துணை முதலமைச்சராகியுள்ள உதயநிதி ஸ்டாலின் ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவதில் நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் திமுக அரசு குறியாக உள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து ஸ்டாலினின் திமுக அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். சென்னை மாநகர மக்கள் ஸ்டாலினின் திமுக அரசை நம்பாமல் தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அருகிலுள்ள மேம்பாலங்களில் வரிசையாக நிறுத்தி வருவதை இன்றைய தினம் ஊடகங்கள் செய்தியாக ஒளிபரப்பி வருகின்றன.

    தற்போது உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காக மற்ற அமைச்சர்களை ஓரங்கட்டி வைத்திருப்பதும், அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

    தன் மகனுக்கு வெற்று விளம்பரங்கள் மூலம் புகழும், பெருமையும் சேர்க்கும் வேலையை கைவிட்டுவிட்டு, தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் பலரும் தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர்.
    • மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் 16 தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் பலரும் தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர்.

    சென்ற வருடம் பெய்த கனமழையால் கார்கள் கடுமையாக சேதமானதால் இந்த முறை கார்களை பாதுகாக்க வாகன ஓட்டிகள் இவ்வாறு செய்து வருகின்றனர்.

    மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனையடுத்து வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    ×