என் மலர்
நீங்கள் தேடியது "water level"
- குடிநீர் தேவை ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் மில்லியன் கனஅடி தேவையாக உள்ளது.
- சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய ஏரிகள், கல்குவாரி குட்டைகளை அதிகாரிகள் மேம்படுத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி. ஏரியில் 1081 மில்லியன் கனஅடி (1.08 டி.எம்.சி.) மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் வரும் ஆண்டுகளில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னையில் குடிநீர் தேவை ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் மில்லியன் கனஅடி தேவையாக உள்ளது.
வரும் ஆண்டுகளில் குடிநீர் தேவை 25 ஆயிரம் மில்லியன் கனஅடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய ஏரிகள், கல்குவாரி குட்டைகளை அதிகாரிகள் மேம்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சோழவரம் ஏரியின் நீர்மட்டத்தை 18.86 அடியில் இருந்து 22 அடியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஏரியை ஆழப்படுத்தி தற்போதைய கொள்ளளவை விட 3 மடங்கு அதிகரிக்கப் பட உள்ளது. தற்போது சோழவரம் ஏரியில் 1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே (1081 மி.கனஅடி) தேக்கி வைக்க முடியும். இது 3 டி.எம்.சி. ஆக உயர்த்தப்பட இருக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சோழவரம் ஏரியில் நீர் இருப்பை 3 டி.எம்.சி. ஆக அதிகரிக்க திட்டம் உள்ளது. இது தொடர்பாக திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த பணிக்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்றனர்.
- சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 36. 74 அடியாக இருந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் நீர் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இவற்றிற்கு 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
காண்டூர் கால்வாயில் நடைபெற்ற புனரமைப்புபணி நிறைவடைந்ததை அடுத்து பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 72 கோடி மதிப்பில் காண்டூர் கால்வாயில் ஏற்பட்ட பழுதுகள் சமீபத்தில் நீக்கப்பட்டதோடு நீர்க்கசிவுகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு பக்கவாட்டு சுவர்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் உடைப்பு, நீர் கசிவு இன்றி திருமூர்த்தி அணையை வந்து அடைந்தது .இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 36. 74 அடியாக இருந்தது. அணைக்கு 821 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 23 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் 4 மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை விரைந்து செல்வது குறித்தும் தண்ணீர் திருட்டை தடுப்பது குறித்தும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அணையில் இருந்து அனேகமாக வருகிற 15-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. அணைக்கு 520 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2520 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது. அணைக்கு 100 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி திறக்கப்படுகிறது.
இருப்பு 1634 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.11அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 340.60 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 78.78 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 37.88 மி.கன அடியாக உள்ள.
பெரியாறு 7, தேக்கடி 3.2, கூடலூர் 1, சோத்துப்பாறை 1.2, உத்தமபாளையம் 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- ஒரு வாரத்தில் 32 அடியாக உயர்ந்துள்ளது.
- குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கள்ளக்குறிச்சி:
தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெப்பம் சலனம் காரணமாக பரவ லாக மழை பெய்து வருகிறது. அதேபோல் கடந்த 2,3 நாட்களாக கல்வராயன் மலையில் மாலை நேரங்க ளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கல்வராயன் மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரண மாக கல்படை ஆற்றின் வழியாக நேற்று முன்தினம் நிலவரப்படி 200 கன அடி நீரும் பிறகு படிப்படியாக குறைந்து தற்போது 150கன அடி வரை தண்ணீர் கல்படையாற்றின் வழியாக கோமுகி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டும் ஏற்கனவே 25 அடியாக இருந்த நிலையில் தற்போது ஒரு வாரத்தில் 32 அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணை நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கோமுகி அணை நீர்மட்டம் உயர்ந்து வரு வதால் கச்சிராயப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.53 அடியாக சரிந்துள்ளது.
- அணையில் இருந்து 3,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடையாத தால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.
பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக நீர்திறப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள து. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.53 அடியாக சரிந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 622 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு ள்ளது. தடப்பள்ளி-அரக்க ன் கோட்டை பாசனத்திற்கு 400 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி,
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இதேபோல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.98 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 16.07 அடியாக உள்ளது.
வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.49 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. அணைக்கு 94 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2237 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 46.74 அடியாக உள்ளது.
நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1614 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 302.98 மி.கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 67.24 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 27.84 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு 17.6, தேக்கடி 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- அணைகள் மற்றும் ஆறு, குளம், கண்மாய் ஆகிய நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது.
- மேற்கு தொடர்ச்சி மலை, கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
கூடலூர்:
தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கோடை காலத்தை மிஞ்சும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
மேலும் அணைகள் மற்றும் ஆறு, குளம், கண்மாய் ஆகிய நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை, கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 400 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர் மட்டம் 47.01 அடியாக சரிந்துள்ளது. வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அடியோடு நின்று விட்டது.
எனவே மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 67.05 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
- தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி யில் 14707 ஏக்கர் நிலத்தில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது. அவ்வ ப்போது கண்ணாமூச்சி காட்டும் மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் 119.35 அடியாக குறைந்து ள்ளது. 95 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.56 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.70 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம்.
- பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. இது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5மாவட்ட மக்களின் விவ சாயத்திற்கும், குடிநீருக்கும் பிரதானமாக விளங்கி வருகிறது. அணைக்கு நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, மூலவைகை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை காரணமாகவும், பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் நீர்வரத்து இருக்கும்.
கடந்த சில மாதமாக வைகை அணை, பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. வைகை அணையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லை. கடந்த கோடை காலத்தில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பெரியாறு, வைகை அணையில் இருந்து நீர் ஆவியாகி குறைய தொடங்கியது. இதனால் அணைகளுக்கு நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம். இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.05 அடியாக உள்ளது. அணைக்கு 61 கன அடிநீர் வருகிறது. 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2836 மி.கன அடியாக உள்ளது. வைகை அணியின் நீர்மட்டம் 48.31 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. இருப்பு 1786 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 302.98 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.32 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. திறப்பு 3 கனஅடியாக உள்ளது. இருப்பு 32 மி.கன அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.
+2
- பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
- குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழகத்தில் 2-வது பெரிய மண் அணையாகும். பவானி ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர அணையில் ஏராளமான குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலை பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பொழிவு இல்லாததாலும், அணையில் இருந்து அதிகளவில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 77.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 322 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1305 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும். தற்போது 32.44 அடியாக நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதே போல் 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.72 அடியாகவும், 33.46 அடியாக உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் தற்போது 22.11 அடியாகவும் குறைந்து காணப்பட்டது.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.