என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீர்மட்டம்"
- டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது.
- அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 431 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 72 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நேற்று 64.64 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 65.04 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 28.58 டி.எம்.சி.யாக உள்ளது.
- காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.86 அடியாக உயர்ந்துள்ளது.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.86 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,756 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.92 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.69 அடியாகவும் உள்ளது.
- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.74 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வினாடிக்கு 3239 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- திற்பரப்பு அருவியில் குளிக்க தொடர்ந்து தடை நீடிப்பு
- விளவங்கோடு தாலு காவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 5 வீடுகளும் சேத மடைந் துள்ளன.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்து வந்த மழை யின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வருகின்றன. தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி வந்த நிலையில் அணையில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்பொழுது அணையின் நீர்மட்டம் குறைந்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படிப் படியாக குறைய தொடங்கி யுள்ளது. திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்ப தற்கு இன்று 8-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உள்ள நிலையில் நேற்று மேலும் 9 வீடுகள் இடிந்து உள்ளது.
விளவங்கோடு தாலு காவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 5 வீடுகளும் சேத மடைந் துள்ளன.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளை பொதுப்பணித்துறை அதி காரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வரு கிறார்கள். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 39.79 அடி யாக உள்ளது. அணைக்கு 1104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 228 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. அணை யின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 40 அடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.05 அடியாக உள்ளது. அணைக்கு 841 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 15.78 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 15.87 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.90 அடியாகவும், மாம்ப ழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் 50.94 அடியா கவும் உள்ளது. நாகர்கோ வில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் இன்று காலை 21.40 அடியாக உள்ளது.
- மேட்டூர் அணையில் நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 அடி உயர்ந்தது.
- கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
பூதலூர்:
காவிரி பாசன பகுதி விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜீன் 12ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 120 நாட்களுக்கு பிறகு அக்டோபர் 10ஆம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பாசனப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வந்தது இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் கடந்த ஆறு நாட்களில் 12 அடி உயர்ந்தது. அதே சமயத்தில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8893 கன அடியாக இருந்தது.
அணையின் நீர்மட்டம் 42.44 அடியாக உள்ளது.கடந்த ஆண்டு இந்த நாளில் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத் தக்கது. கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விட ப்படவில்லை
- புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
- தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகர் மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது முக்கடல் அணை. இந்த அணையில் இருந்து தான் நாகர் மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, மழையை நம்பி தான் உள்ளது. ஆனால் கடந்த காலத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாமல் பொய்த்துப்போனதால், முக்கடல் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றது.
இதனால் மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த 1 மாதம் மழை கொட்டிய போதும் முக்கடல் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. முக்கடல் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் பிளஸ் நிலைக்கு வந்தது. 5 மாதங்களுக்கு பிறகு இன்று காலை அணையின் நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதன்மூலம் நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பேச்சிப்பாறை 25 அடியை எட்டியது
- நேற்று இரவு அணை பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு, தென்கிழக்கு என இரு பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட 69 சதவீதம் குறை வாகவே பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் சரிந்து காணப் பட்டது. பாசன குளங்களி லும் தண்ணீர் குறைவாகவே இருந்தது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் கடைமடை பகுதிகளில் கன்னி பூ சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை நீடித்து வருவதைய டுத்து பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று இரவு அணை பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்தது. இதைய டுத்து அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத்தொடங்கியது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2½ அடியும் பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 5 அடியும் உயர்ந்துள்ளது.
ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்களும் நிரம்பி வருகின்றன. 600-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 25 அடியை எட்டியது. அணைக்கு 2409 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 330 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.40 அடியாக இருந்தது. அணைக்கு 1820 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.36 அடியாக உள்ளது. அணைக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.46 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 4.92 அடியாகவும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19.50 அடியாக உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 67.2, பெருஞ்சாணி 50.8, சிற்றார் 1-40.4, சிற்றார் 2-26.8, பூதப்பாண்டி 32.6, களியல் 40.4, கன்னிமார் 42.2, கொட்டாரம் 28.4, குழித்துறை 44.8, மயிலாடி 36.2, நாகர்கோவில் 24.2, புத்தன் அணை 48.6, சுருளோடு 48.2, தக்கலை 37.2, குளச்சல் 34.6, இரணியல் 33, பாலமோர் 68.4, மாம்பழத்துறையாறு 35, திற்பரப்பு 47.6, ஆரல்வாய்மொழி 24.2, கோழிபோர்விளை 52.2, அடையாமடை 61.3, குருந்தன்கோடு 14.6, முள்ளங்கினாவிளை 41.6, ஆணைக்கிடங்கு 32.4, முக்கடல் 39.2.
- குடிநீர் தேவை ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் மில்லியன் கனஅடி தேவையாக உள்ளது.
- சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய ஏரிகள், கல்குவாரி குட்டைகளை அதிகாரிகள் மேம்படுத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி. ஏரியில் 1081 மில்லியன் கனஅடி (1.08 டி.எம்.சி.) மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் வரும் ஆண்டுகளில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னையில் குடிநீர் தேவை ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் மில்லியன் கனஅடி தேவையாக உள்ளது.
வரும் ஆண்டுகளில் குடிநீர் தேவை 25 ஆயிரம் மில்லியன் கனஅடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய ஏரிகள், கல்குவாரி குட்டைகளை அதிகாரிகள் மேம்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சோழவரம் ஏரியின் நீர்மட்டத்தை 18.86 அடியில் இருந்து 22 அடியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஏரியை ஆழப்படுத்தி தற்போதைய கொள்ளளவை விட 3 மடங்கு அதிகரிக்கப் பட உள்ளது. தற்போது சோழவரம் ஏரியில் 1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே (1081 மி.கனஅடி) தேக்கி வைக்க முடியும். இது 3 டி.எம்.சி. ஆக உயர்த்தப்பட இருக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சோழவரம் ஏரியில் நீர் இருப்பை 3 டி.எம்.சி. ஆக அதிகரிக்க திட்டம் உள்ளது. இது தொடர்பாக திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த பணிக்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்றனர்.
- அணைகளின் நீர்மட்டம் உயர்வு
- திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. சிற்றாறு-1 அணை பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்ச மாக 33.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திற்பரப்பு அருவி பகுதி யில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை களுக்கும் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ½ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 1 அடியும் உயர்ந்துள்ளது. பேச்சி பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 20.89 அடியாக உள்ளது. அணைக்கு 1190 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. அணைக்கு 628 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.41 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.51 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 9.40 அடியாகவும் மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாக இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 15.10 அடியாக உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 23.2, பெருஞ்சாணி 7, சிற்றாறு1- 33.6, சிற்றாறு 2-26.2, பூதப்பாண்டி 1.4, களியல் 26.2, புத்தன்அணை 8.2, சுருளோடு 6.4, திற்பரப்பு 25.8.
- சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 36. 74 அடியாக இருந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் நீர் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இவற்றிற்கு 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
காண்டூர் கால்வாயில் நடைபெற்ற புனரமைப்புபணி நிறைவடைந்ததை அடுத்து பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 72 கோடி மதிப்பில் காண்டூர் கால்வாயில் ஏற்பட்ட பழுதுகள் சமீபத்தில் நீக்கப்பட்டதோடு நீர்க்கசிவுகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு பக்கவாட்டு சுவர்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் உடைப்பு, நீர் கசிவு இன்றி திருமூர்த்தி அணையை வந்து அடைந்தது .இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 36. 74 அடியாக இருந்தது. அணைக்கு 821 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 23 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் 4 மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை விரைந்து செல்வது குறித்தும் தண்ணீர் திருட்டை தடுப்பது குறித்தும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அணையில் இருந்து அனேகமாக வருகிற 15-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.