search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viranam Lake"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலும் அதிகரித்துள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி.

    இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஏரியால் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ஏரிக்கு மேட்டூர் நீர், கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மழை காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து காட்டாறுகள் மூலம் நீர் ஏரிக்கு தண்ணீர் வரும். தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலும் அதிகரித்துள்ளது.

    இந்தச் சூழலில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 40.30 அடியாக உள்ளது.

    அதே நேரத்தில், தற்போது ஏரிக்கு நீர் வரும் 9 அடி உள்ள கீழணையில், 2.7 அடியாக குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.

    தற்போது சென்னைக்கு விநாடிக்கு 48 கனஅடியும், பாசனத்துக்கு விநாடிக்கு 100 கன அடியும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இது போல அனுப்பி வைக்கப்பட்டால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்துவிடும். இதனால் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதை நிறுத்தும் நிலை ஏற்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரி நீரில் நச்சுக்கள் கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
    • ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுக்கள் இருக்க கூடாதென உலக சுகாதார மைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி சென்னையின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த ஏரி கடந்த 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரி நீரில் நச்சுக்கள் கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2019-ம் ஆண்டு மார்ச் வரை 16 கி.மீ. பரப்பில் உள்ள வீராணம் ஏரியின் 6 இடங்களில் இருந்து ஏரி நீர் எடுக்கப்பட்டது. இதனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது வீராணம் ஏரி நீரில் 10 சயனோ பாக்டீரியாக்கள் உள்ளதால் இவைகள் மூலமாக இந்த நச்சுக்கள் உருவானது ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

    ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுக்கள் இருக்க கூடாதென உலக சுகாதார மைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வீராணம் ஏரியில் ஒரு லிட்டர் நீரில் 17.72 மைக்ரோ கிராம் முதல் 19.38 கிராம் வரை நச்சுகள் உள்ளது கண்டறியப்பட்டது. இந்த நச்சுக்கள் மனித உடலில் உள்ள கல்லீரலை பாதிப்படைய செய்வதோடு, தோல் வியாதிகளும் வருமென சென்னை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    மழைக்காலங்களில் விளைநிலங்களில் தேங்கும் நீர் வடிவாய்க்கால்கள் மூலம் வீராணம் ஏரிக்குள் வருகிறது. இந்த நிலங்களின் விளைச்சலுக்காக பயன்படுத்தப்படும் உரங்களினால், ஏரிக்கு வரும் நீரின் மூலமாக இந்த நச்சுக்கள் வந்திருக்கும் என்று சென்னை பிரசிடென்சி கல்லூரி தாவரவியல் ஆராய்ச்சியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இந்நீரில் உள்ள அமினோ அமிலம் மூலமாக புற்றுநோய் வருவதற்கான அபாயமும் உள்ளதாக அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

    கடந்த 2-ம் உலகப்போரின் போது மேற்கண்ட நச்சுக்களை எதிரி நாடுகளில் உள்ள நீர்நிலைகளில் கலந்து அந்த மக்களை ஹிட்லர் கொன்று குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது.
    • வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது. மேலும் குறிப்பாக இந்த வீராணம் ஏரியிலிருந்து சென்னை வாழ்மக்கள் குடிநீருக்காக தினமும் தண்ணீர் செல்கிறது. 

    தற்போது கோடை வெயில் முடிந்த நிலையிலும் குறையாத வெப்பத்தின் தாக்கத்தால் வீராணம் ஏரியில் நீர் குறைந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் ஏரியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிருந்து சென்னை குடிநீருக்கு ஒரு நாளைக்கு அதிகமான கனஅடி அளவு தண்ணீர் அனுப்பப்பட்ட நிலையில் தண்ணீர் குறைந்து வரும் காரணத்தால் தற்போது குறைந்த அளவு தண்ணீர் மட்டும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் சென்னைக்கு அனுப்பும் குடிநீர் சுகாதாரமாக அனுப்பப்படுகிறதா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. ஏரியின் கரையோரங்களில் சேரும் சகதியுமாக காணப்பட்டு துர்நாற்றம் வீசிகின்றது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    • அணையின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். தற்போது வீராணம் ஏரியில் 41.70 அடி தண்ணீரே உள்ளது.

    கடலூர்:

    வீராணம் ஏரி வறண்டு வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஏரியை சுற்றி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதியை பெற்று வருகிறது. கோடை வெப்பம் காரணமாக தற்போது வீராணம் ஏரி வறண்டு வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வீராணம் ஏரியில் 41.70 அடி தண்ணீரே உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். அணைக்கு நீர்வரத்து இல்லை.

    அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறந்து காவிரியில் தண்ணீர் வந்தால் தான் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும். அல்லது டெல்டா பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே ஏரிக்கு நீர் வரும். ஏரி வறண்டு வருவதால் வெளிநாட்டு பறவைகள் இங்கு அதிகம் வர தொடங்கி உள்ளன. அவைகள் ஏரியில் உள்ள மீன்களை பிடித்து தின்று வருகிறது. வீராணம் ஏரி வறண்டு வருவதால் அப் பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    • பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதார பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்படுகிறது.
    • விவசாயிகளின் நலனுக்காக வீராணம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம்ம ன்னார்கோவில் லால்பேட்டை அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு விவசாயிகளுக்கும் மற்றும் சென்னை மக்களுக்கு குடிநீர் காட்டிய பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதார பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழையை முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக காட்டுமன்னார்கோவில் மற்றும் ஏரி அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பொது மக்களின் நலனுக்காக வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

    வீராணம் ஏரி 47.50 இதன் மொத்த கொள்ளளவு ஆகும். தற்போது தினமும் வீராணம் எரியிலிருந்து சென்னை மக்களின் குடிநீருக்காக 64 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் வீராணம் ஏரியிலிருந்து வடவாறு வழியாக 1897 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பயன்பா ட்டின் தேவைக்காக சேத்தியா தோப்பு வி. என். எஸ். மதகு வழியாக 431 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தற்போது வீராணம் ஏரி 45.70 கொள்ளளவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக வீராணம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    • நீர்வரத்து அதிக உள்ளதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.85 அடியாக உயர்ந்தது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாந–கரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாக உள்ளது. இந்த ஏரிக்கு பருவ–காலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. அதன்படி வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை தண்ணீர் கடந்த மாதம் வந்து சேர்ந்தது. இதனால் நீர்மட்டம் படிபடி–யாக உயர்ந்தது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறு வழியாக கடலில் பாய்ந்தது. வீராணம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அங்கி–ருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும். தற்போது கொள்ளி–டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் திறந்து–விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.85 அடியாக உயர்ந்தது. ஏரிக்கு 3,391 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 68 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதேபோன்று நீர் வரத்து இருந்தால் இந்த வாரத்துக்குள் வீராணம் ஏரி நிரம்பிவிடும் என்று பொது–பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நீர்மட்டம் 42 அடியை எட்டியது வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது எப்போது? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாக உள்ளது. இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்னதாக திறக்கப்பட்டது. எனவே காவிரி தண்ணீர் ஒரு மாதத்துக்கு பின் கடைமடை பகுதியான நாகூர்வரை சென்றது. வீராணம் ஏரிக்கு கொள்ளிடம் வழியாக கீழணைக்கு காவிரிநீர்வந்து சேரும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.

    இந்த ஆண்டு திறக்கப்பட்ட காவிரிநீர் கடந்த மாதம் வீராணம் ஏரிக்கு வந்து சேர்ந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. வடவாறு வழியாக 146 கனஅடிநீர் ஏரிக்கு வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 57 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் வீராணம் ஏரி எப்போது பாசனத்துக்கு திறக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    இது குறித்து பொது பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த விவசாய பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். இதனிடையே வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதுதவிர காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, சோழத்தரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது வீராணம் ஏரி விரைவில் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் தங்களது நிலங்களை உழும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×