நீர்வரத்து அதிகரிப்பு: வேகமாக நிரம்பிவரும் வீராணம் ஏரி

நீர்வரத்து அதிக உள்ளதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.85 அடியாக உயர்ந்தது
நீர்வரத்து அதிகரிப்பு: வேகமாக நிரம்பிவரும் வீராணம் ஏரி
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாந–கரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாக உள்ளது. இந்த ஏரிக்கு பருவ–காலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. அதன்படி வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை தண்ணீர் கடந்த மாதம் வந்து சேர்ந்தது. இதனால் நீர்மட்டம் படிபடி–யாக உயர்ந்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறு வழியாக கடலில் பாய்ந்தது. வீராணம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அங்கி–ருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும். தற்போது கொள்ளி–டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் திறந்து–விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.85 அடியாக உயர்ந்தது. ஏரிக்கு 3,391 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 68 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதேபோன்று நீர் வரத்து இருந்தால் இந்த வாரத்துக்குள் வீராணம் ஏரி நிரம்பிவிடும் என்று பொது–பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com