என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருஞ்சாணி அணை"

    • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
    • கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையிலும் நீடித்தது. நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நேற்று இரவு விட்டுவிட்டு சாரல் மழை பெய்து. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தது. ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி,குழித்துறை, கோழிப்போர்விளை, குளச்சல், இரணியல், தக்கலை பகுதிகளில் இன்று காலையில் மழை வெளுத்து வாங்கியது. மோதிரமலை, தச்சமலை பகுதிகளிலும் மழை பெய்தது.

    பகுதியில் பெய்த மழையினால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஏராளமான மரங்கள் முறிந்துவிழுந்தன. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி தேங்கியது.

    மாவட்ட முழுவதும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. பாலமோரில் அதிகபட்சமாக 55.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.64 அடியாக இருந்தது. அணைக்கு 1,164 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 361 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.78 அடியாக உள்ளது. அணைக்கு 1,224கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 285 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 14 அடி எட்டியது.

    தொடர் மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் மற்றும் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழைக்கு வீடு ஒன்றும் இடிந்து விழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் மழை பெய்தபடியே இருப்பதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.

    • மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டியது.
    • தொடர் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரண்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மயிலாடி, நாகர்கோவில், தக்கலை, கோழிப்போர் விளை, மாம்பழத்துறையாறு, ஆணைக்கிடங்கு ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 105.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    கொட்டாரம், பூதப்பாண்டி, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு, களியல், குழித்துறை, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டியது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரும் நிலையில் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதி யிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளின் நீர்மட்டத்தை பொது பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.பெருஞ்சாணி அணை இன்று காலை 70 அடியை எட்டியது. அணைக்கு 762 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.45 அடியாக உள்ளது.

    அணைக்கு 1319 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 753 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 131 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 13.02 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 45.93 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.40 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 9.2 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோழிப்போர்விளை 105.8, மயிலாடி 92.4, ஆணைக்கிடங்கு 84.2, மாம்பழத்துறையாறு 78, நாகர்கோவில் 74.4, தக்கலை 72, அடையாமடை 52, குருந்தன்கோடு 26, கொட்டாரம் 62.8, கன்னிமார் 18.6, ஆரல்வாய்மொழி 6, பூதப்பாண்டி 26.2, முக்கடல் 24, பாலமோர் 33.6, இரணியல் 16, களியல் 16, குழித்துறை 63.4, பேச்சிப்பாறை 19.6, பெருஞ்சாணி 29.6, புத்தன்அணை 29, சுருளோடு 36.2, திற்பரப்பு 34.6, முள்ளங்கினாவிளை 38.2.

    தொடர் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரண்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்து வருகிறது.

    • உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது.
    • தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பரவலாக சாரல் மழை நீடித்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மழை சற்று குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து உள்ளது. நீர்வரத்து குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.

    526 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 394 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் இன்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.44 அடி யாக இருந்தது. அணைக்கு 861 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 503 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 394 கன அடி தண்ணீர் உபரியாகவும் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. அணைக்கு 761 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்
    • காலை அணையிலிருந்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 73.19 அடியாக உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பெருஞ்சாணி அணை நேற்று மூடப்பட்ட நிலையில் அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் அணையில் இருந்து மீண்டும் தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை அணையிலிருந்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 73.19 அடியாக உள்ளது. அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.12 அடியாக உள்ளது. அணைக்கு 691 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 785 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.38 அடியாக இருந்தது.
    • சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 9.87 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மதியம் நேரங்களில் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் வெயில் அடித்து வந்தது. மதியத்துக்கு பிறகு சீதோஷண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மேற்கு மாவட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.

    சிற்றாறு-1 அணைப் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 90.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தக்கலை, அடையாமடை, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்துள்ளனர்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.38 அடியாக இருந்தது. அணைக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.50 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.77 அடியாக உள்ளது.

    அணைக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 9.87 அடியாக உள்ளது. அணைக்கு 331 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19.50 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 49.6, பெருஞ்சாணி 5.4, சிற்றாறு 1-90.2, சிற்றாறு 2-62.2, பூதப்பாண்டி 5.2, புத்தன் அணை 4.2, தக்கலை 2, பாலமோர் 15.2, மாம்பழத்துறையாறு 4, திற்பரப்பு 18.3, அடையாமடை 7, முள்ளங்கினாவிளை 17.4.

    • அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், குளத்து பாசனத்தை நம்பியும் விவசாயி கள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. தக்கலை, அருமநல்லூர், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை நேற்று திறக்கப்பட்டது.

    அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 50 கன அடியாக குறைக்கப்பட் டுள்ளது. பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டு அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற சானல்களிலும் தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தேவை யான அளவு தண்ணீரை வெளியேற்றவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.62 அடி யாக இருந்தது. அணைக்கு 227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.55 அடியாக இருந்தது. அணைக்கு 60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது.

    • பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    நாகர்கோவில், ஜூன்.3-

    கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந் தேதி திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் 61 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 211 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானலுக்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது.

    இந்த தண்ணீர் தோவாளை மற்றும் அனந்தனார் சானல்களில் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற சானல்களில் திறந்து விடவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 40.66 அடியாக இருந்தது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 61 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணிஅணை நீர்மட்டம் 41.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார் 1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றார் 2 நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும் மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    • பெருஞ்சாணி அணையில் இருந்து 550 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • சானல்களில் ஷிப்ட் முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் : 

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் வழக்கமாக பெய்ய தொடங்கும்.

    ஆனால் இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பாலமோர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அங்கு 13.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குழித்துறை, பேச்சிப்பாறை, மாம்பழத்துறையாறு, திருவட்டார் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    மற்ற இடங்களில் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களிலிருந்து கன்னிபூ சாகுபடிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் பின்னர் 250 கன அடியாக உயர்த்தப்பட்டது.

    தற்பொழுது பெருஞ்சாணி அணையிலிருந்து 550 கன அடி தண்ணீர் கன்னிபூ சாகுபடிக்காக திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி, பேச்சிப் பாறை அணையில் இருந்தும் 61 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. 2 அணைகளில் இருந்தும் 611 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் சானல்களில் ஷிப்ட் முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.74 அடியாக இருந்தது. அணைக்கு 123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 38.95 அடியாக இருந்தது. அணைக்கு 207 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 5 நாட்களில் 11 அடி உயர்வு
    • மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. இன்று காலையில் அங்கு மழை பெய்தது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, மாம்பழத்துறையாறு, நாகர்கோவில் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. சிற்றாறு-2 அதிகபட்சமாக 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதிகளிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 28.60 அடியாக உள்ளது. அணைக்கு 294 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.93 அடியாக உள்ளது. அணைக்கு 972 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.41 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 12 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாக உள்ளது.

    விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக பாசன குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மழை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பெருஞ்சாணியில் 15.8 மில்லி மீட்டர் மழை பதிவு
    • 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் சரிந்து காணப்படுகிறது. பாசன குளங்களிலும் போது மான அளவு தண்ணீர் இல்லை. இருப்பினும் விவ சாயிகள் பருவமழையை நம்பி சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை கண்ணாமூச்சி காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் நாகர்கோ வில் பகுதியில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப் பட்டது. பின்னர் திடீரென மழை பெய்தது. ½ மணி நேரமாக மழை தூறியது.

    இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. பள்ளி சென்ற மாணவிகள் குடைபிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். சுசீந்திரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குல சேகரம், தக்கலை, ஆரல் வாய்மொழி, மார்த்தாண்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது.

    திற்பரப்பு அருவியிலும் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்ச மாக 15.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    அணைகளுக்கு வரக்கூ டிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.69 அடியாக இருந்தது. அணைக்கு 366 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 689 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 22.95 அடியாக உள்ளது. அணைக்கு 193 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட் டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது.

    இதையடுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பிரச்சினை சமா ளிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் புத்தன் அணையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண் ணீரை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 15.4, களியல் 14.5, திற்பரப்பு 12.8, பாலமோர் 12.2, கோழி போர்விளை 8.2, பூதப்பாண்டி 7.4, குழித்துறை 6.2, குருந்தன்கோடு 4.8, நாகர் கோவில் 4.2, அடையாமடை 4.2, மயிலாடி 2.6, பேச்சிப்பாறை 2.4, ஆணைக் கிடங்கு 2.1, கொட்டாரம் 1.2.

    • பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
    • திறக்கப்பட்ட தண்ணீர் சானலில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. வழக்கமான அளவை காட்டிலும் 65 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. மழை குறைந்ததையடுத்து நீர் நிலைகளிலும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 27.57 அடியாக இருந்தது. அணைக்கு 312 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 681 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக வெளி யேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஏற்கனவே கன்னி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதையடுத்து பேச்சிப் பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சானலில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீரை விட கூடுதல் அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் இன்று காலை 24.65 அடியாக இருந்தது. அணைக்கு 24 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 11.41 அடியாகவும், மாம்பழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 11.1 அடியாகவும் உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பாசன குளங்களிலும் தண்ணீர் வற்ற தொடங்கி யுள்ளது. 2000-க்கு மேற்பட்ட பாசன குளங்களில் ஒரு சில குளங்களில் மட்டுமே தண்ணீர் முழு கொள்ள ளவில் உள்ளது.

    75 சதவீ தத்திற்கு மேற்பட்ட குளங்களில் தண்ணீர் குறைவாகவே வருகிறது. அணைகளிலும், குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • குமரியில் போதிய அளவு மழை இல்லாததால் நீர்மட்டம் சரிவு
    • பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்ய வில்லை. இயல்பான மழை அளவை காட்டிலும் 69 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. மழை பெய்யாததையடுத்து மாவட்டம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார்கள். மதியம் நேரங்களில் சாலையில் கானல் நீராகவே காட்சி அளிக்கிறது. மழை ஏமாற்றி வரும் நிலையில் பாசன குளங்களிலும், அணை களிலும் நீர்மட்டம் கிடுகிடு வென சரிய தொடங்கி யுள்ளது. ஏற்கனவே அணை மற்றும் பாசன குளங்களை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 3 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. மீதம் உள்ள 3 ஆயிரம் ஹெக்டே ரில் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தேவைப்படுகிறது.

    கடைமடை பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. அணையில் குறைவான அளவில் தண்ணீர் உள்ளதை யடுத்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வந்த நிலையில் தற்போது 500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.28 அடியாக இருந்தது. அணைக்கு 375 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 504 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 27.10 அடியாக உள்ளது.

    அணைக்கு 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 11.38 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 10.30 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் சரிந்து காணப்படுகிறது. 

    ×