search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு சரிவு
    X

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு சரிவு

    • குமரியில் போதிய அளவு மழை இல்லாததால் நீர்மட்டம் சரிவு
    • பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்ய வில்லை. இயல்பான மழை அளவை காட்டிலும் 69 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. மழை பெய்யாததையடுத்து மாவட்டம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார்கள். மதியம் நேரங்களில் சாலையில் கானல் நீராகவே காட்சி அளிக்கிறது. மழை ஏமாற்றி வரும் நிலையில் பாசன குளங்களிலும், அணை களிலும் நீர்மட்டம் கிடுகிடு வென சரிய தொடங்கி யுள்ளது. ஏற்கனவே அணை மற்றும் பாசன குளங்களை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 3 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. மீதம் உள்ள 3 ஆயிரம் ஹெக்டே ரில் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தேவைப்படுகிறது.

    கடைமடை பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. அணையில் குறைவான அளவில் தண்ணீர் உள்ளதை யடுத்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வந்த நிலையில் தற்போது 500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.28 அடியாக இருந்தது. அணைக்கு 375 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 504 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 27.10 அடியாக உள்ளது.

    அணைக்கு 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 11.38 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 10.30 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் சரிந்து காணப்படுகிறது.

    Next Story
    ×