search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிற்றார்-1 பகுதியில் 90.2 மில்லி மீட்டர் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    கன்னிப்பூ சாகுபடிக்காக சுசீந்திரம் காக்கமூர் பகுதியில் எந்திரங்கள் மூலம் நிலத்தை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்ட விவசாயிகளை காணலாம்.

    சிற்றார்-1 பகுதியில் 90.2 மில்லி மீட்டர் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.38 அடியாக இருந்தது.
    • சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 9.87 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மதியம் நேரங்களில் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் வெயில் அடித்து வந்தது. மதியத்துக்கு பிறகு சீதோஷண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மேற்கு மாவட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.

    சிற்றாறு-1 அணைப் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 90.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தக்கலை, அடையாமடை, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்துள்ளனர்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.38 அடியாக இருந்தது. அணைக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.50 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.77 அடியாக உள்ளது.

    அணைக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 9.87 அடியாக உள்ளது. அணைக்கு 331 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19.50 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 49.6, பெருஞ்சாணி 5.4, சிற்றாறு 1-90.2, சிற்றாறு 2-62.2, பூதப்பாண்டி 5.2, புத்தன் அணை 4.2, தக்கலை 2, பாலமோர் 15.2, மாம்பழத்துறையாறு 4, திற்பரப்பு 18.3, அடையாமடை 7, முள்ளங்கினாவிளை 17.4.

    Next Story
    ×