என் மலர்

  நீங்கள் தேடியது "collapsed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சத்ரபது ரெயில் நிலையத்தின் அருகே நடை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். #Mumbai #CSMT #footoverbridgecollapsed
  மும்பை:

  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எப்போதும் பரபரப்பாக காணப்படுவது சத்ரபதி ரெயில் நிலையம். இன்று மாலை வேலை முடிந்து பொதுமக்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

  அப்போது, பிளாட்பாரம் ஒன்றினை இணைக்கும் நடை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அதன்கீழ் சென்ற பலர் சிக்கிக் கொண்டனர்.  தகவலறிந்து உள்ளூர் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

  இடிபாடுகளில் சிக்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் 5 பேர் பலியானதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. #Mumbai #CSMT #footoverbridgecollapsed
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரேசிலில் அணை உடைந்து 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 150 பேரை காணவில்லை. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. #Brazildam

  பிரேசிலியா:

  பிரேசில் நாட்டில் புரு மாடின்கோ நகரம் அருகே ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணை பயன்படுத்தப்படாமல் இருந்தது. நேற்று இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த அணை உடைந்தது.

  உடனே அதில் இருந்த தண்ணீரும், சேறும் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியது.

  இச்சம்பவத்தில் இரும்புதாது சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தவிர 150 பேரை காணவில்லை. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மொடக்குறிச்சி அருகே எதிரே வந்த கார் மீது ஈரோடு பஸ் மோதி ரோட்டோர பள்ளத்தில் இறங்கி சாய்ந்து நின்றது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  மொடக்குறிச்சி:

  ஈரோட்டில் இருந்து வெள்ள கோவிலுக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர், மேட்டுபாளையத்தில் ஒரு வளைவில் திரும்பியது. அப்போது எதிரே எல்லக் கடையில் இருந்து ஒரு கார் வந்தது. பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதியது. பெரும் விபத்தை தவிர்க்க பஸ் டிரைவர் பஸ்சை ஒடித்து ஓட்டிய போது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ரோட்டோரத்தில் இறங்கி அதில் இருந்த பள்ளத்தில் இறங்கி சாய்ந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக, பஸ் கவிழவில்லை.

  இதனால் பஸ் பயனிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் முன்பகுதியில் இருந்த 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் காரின் முன் பகுதி நொருங்கியது. பஸ்சின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

  இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மொடக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்தை சரி செய்தனர்.

  மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊட்டி-கூடலூர் சாலையில் சொகுசு பஸ் கவிழ்ந்து 5 பேர் படு காயம் அடைந்தனர்.
  ஊட்டி:

  மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து 15 பேர் தங்களது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 18-ந் தேதி வந்தனர். 3 நாட்கள் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவர்கள் 15 பேர் மைசூருக்கு இயக்கப்படும் சொகுசு பஸ்சில் நேற்று ஊட்டியில் இருந்து கோலாப்பூர் செல்வதற்காக புறப்பட்டனர். அந்த சொகுசு பஸ் ஊட்டி, தலைகுந்தா, பைக்காரா வழியாக கூடலூர் சென்று மைசூருக்கு செல்கிறது.  பெங்களூருவை சேர்ந்த டிரைவர் மதுக்குமார் (வயது 45) பஸ்சை ஓட்டினார். ஊட்டி-கூடலூர் சாலையில் கிளன்மார்கன் சந்திப்பு அருகே சொகுசு பஸ் சென்ற போது, ஒரு வளைவில் திடீரென எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த மரத்தில் பஸ் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கவிழ்ந்து கிடந்த சொகுசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

  அதனை தொடர்ந்து காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சதாசிவ், ஆஷாராணி, கனஉதானி, ராய்ப்பாகி, சிவநாயக் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காயம் அடைந்த 5 பேருக்கு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இதுகுறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு விசாரித்தார். ஊட்டி-கூடலூர் சாலையில் சொகுசு பஸ் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறைகள் நடுரோட்டில் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  மேட்டுப்பாளையம்:

  நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் பலத்த சூறாவளியிடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மின்கம்பம் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

  இந்நிலையில் நேற்று மாலையும் கல்லாறு, பர்லியார், குன்னூர் ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. மழையின் காரணமாக இன்று அதிகாலை மேட்டுப்பாளையம்- ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு, பர்லியார் இடையே உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டு சாலையோரத்தில் இருந்த ராட்சத பாறைகள் நடுரோட்டில் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இந்நிலையில் இன்று காலை அந்த பகுதி வழியே திருப்பூரை சேர்ந்த 6 பேர் ஊட்டிக்கு புறப்பட்டனர். பாறை சரிந்த இடம் அருகே வந்தபோது கார் விபத்துக்குள்ளானது.

  இது குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்து லேசான காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  காயம் அடைந்தவர்களில் திருப்பூர் மங்கலம் ரோடு 4-வது தெரு சின்சாமி கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்த முத்து ரத்தினம் (36) என்பது மட்டும் தெரியவந்தது. மற்ற 5 பேர் பற்றிய விபரம் உடனே தெரியவில்லை. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ×