search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hut"

    • விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர்.
    • அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது. இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் சத்யா நகரில் விவசாயி வீரப்பன் (62) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று மாலை மிளகாய் அறுவடை செய்யும் பணியில் 12 பெண்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    குடிசை சரிந்து விழுந்தது

    இதையடுத்து விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர். அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது.

    இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.

    பெண் பலி

    இந்த விபத்தில் சுமதி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மாதம்மாள் (65), லட்சுமி (55), ராணி (50), கலா, மணி (39), சாலம்மாள் (55) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொளத்தூர் போலீசார் இறந்த சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சை

    படுகாயம் அடைந்த வர்களில் மாதம்மாள் என்ப வர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமடைந்தது வீட்டிலிருந்த சிலிண்டரை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் மற்றும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசம் ஆயின. இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிசை பகுதியில் உள்ள குடும்பங்களை கணக்கெடுத்து விவரங்கள் சேகரிப்பு.
    • வாழ தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்கள் கணக்கெடுப்பு.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளற்ற மற்றும் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு தகுதியான குடும்பங்களின் விவரங்கள் சேகரிக்கப்ப டுகிறது.

    சமூக பொருளாதார கணக்கெடுப்பு, கலைஞா் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு போன்ற வற்றின் வழியே விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாது நிலைத்த தன்மையற்ற வீடு,வாழத் தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுப்பு செய்ய உள்ளது.

    அதன்படி திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி கருப்பூரில் வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமையில் ஊராட்சி செயலர் முருகானந்தம், கிராம நிர்வாக அலுவலர் சிவகாம சுந்தரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இறையன்பு மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • விளாத்திகுளம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வி வயது (72) இவர் திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
    • நேற்று மதியம் செல்வி மூதாட்டி கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது வீடு மளமளவென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

    எட்டயபுரம்:

    விளாத்திகுளம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வி வயது (72) இவர் திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்துள்ளார்.அன்றாடம் கிடைக்கும்சிறு சிறு வேலைகளை வைத்து தனது வாழ்நாளை கழித்து வந்துள்ளார். நேற்றுமதியம் செல்வி மூதாட்டி கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது வீடு மளமளவென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்தனர்.


    இதுகுறித்து விளாத்திகுளம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    மூதாட்டியின் தீயில் எரிந்த உடமைகளுக்கு உரிய நிவாரணம் வேண்டும், 72 வயதான மூதாட்டி செல்விக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டும் என்று மூதாட்டி செல்வி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆதரவின்றி தவிக்கும் மூதாட்டியின் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டு நிதி உதவி வழங்கி, முதியோர் உதவித்தொகை வழங்க உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் 9-வது வார்டு கவுன்சிலரும், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான வேலுச்சாமி தனது சொந்த செலவில் மூதாட்டி செல்வி இல்லத்தை புதுப்பித்து தருவதாக கூறினார்.

    டிஜிட்டல் இந்தியாவில் வசிக்க இடமின்றி தார்ப்பாயில் வீடு அமைத்து குடும்பங்கள் வசிப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. #digitalindia

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் யூனியனுக்குட்பட்ட காமராஜர் புரத்தில் 10-க்கும் மேற்பட்ட பளியர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதே போல பழனி - கொடைக்கானல் ரோட்டிலும் இவர்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

    இவர்கள் தங்குவதற்கு வீடு இல்லை. படிப்பறிவு இல்லாத இவர்கள் தோட்ட வேலை, கூலி வேலை பார்த்து வருகின்றனர். குறைந்த வருமானத்தில் தினசரி வாழ்க்கையை ஓட்ட வேண்டியது உள்ளதால் இவர்களால் வாடகை கொடுத்து தங்குவதற்கும் வசதி இல்லை.

    இதனால் தார்ப்பாய் மற்றும் வனப்பகுதியில் கிடைக்கும் ஓலைகளை வைத்து வீடுகள் அமைத்து அதில் தங்கி வருகின்றனர். அதிக மழை பெய்யும் போதும், கடுமையான பனி பெய்யும் போதும், குடிசைக்குள் இருப்பது மிகவும் கடினமான செயலாகும்.

    பெரும்பாலான நாட்கள் இவர்களுக்கு இதே போல் அமைந்து விடுவதால் தினசரி குடும்ப செலவுக்கு மட்டும் வேலைக்கு சென்று பசியாறி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கையில், எங்களுக்கு ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளது. ஆனால் நடப்பதற்கு சாலை வசதி இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. மின்சார வசதி கிடையாது. எங்கள் பகுதி மக்களின் குறைகள் குறித்து பல அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் வாதிகளும் வாக்கு கேட்பதற்காக மட்டும் எங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். எங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ செலவு செய்ய முடியாது. 

    மேலும் வேலைக்கும் போக முடியாது என்பதால் பல நாட்கள் பட்டினியாகவே வாழ்க்கையை கழித்து வருகிறோம். எனவே அடிப்படை வசதிகளையாவது நிறைவேற்றித் தர வேண்டும் என்று தெரிவித்தனர். டிஜிட்டல் இந்தியாவில் அனைவருக்கும் வீடு என்று மத்திய அரசு பெருமிதம் கூறி வரும் நிலையில் வசிக்க இடம் இன்றி, குடிக்க தண்ணீர் இன்றி பொதுமக்கள் வாழ்க்கை நடத்தி வருவது வேதனையான வி‌ஷயம். எனவே இந்நிலை மாற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #digitalindia

    ×