search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people living"

    தமிழகத்தில் வீடுகள் இன்றி தெருவில் வசிப்போர் குறித்த விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #StreetDwellers
    சென்னை:

    தமிழகத்தில் வீடுகள் இன்றி சாலையோரம் வசிப்பவர்கள் குளிர்காலத்தில் கடுமையாக அவதிப்படுவதாகவும், அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்ய வேண்டியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதிலும் எத்தனை பேர் வீடின்றி வசிக்கிறார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

    தமிழகம் முழுவதிலும் வீடுகள் இன்றி சாலையோரம் அல்லது தெருவில் வசிக்கும் மக்கள் குறித்து கணக்கெடுத்து ஜனவரி 4-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. #MadrasHC #StreetDwellers
    டிஜிட்டல் இந்தியாவில் வசிக்க இடமின்றி தார்ப்பாயில் வீடு அமைத்து குடும்பங்கள் வசிப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. #digitalindia

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் யூனியனுக்குட்பட்ட காமராஜர் புரத்தில் 10-க்கும் மேற்பட்ட பளியர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதே போல பழனி - கொடைக்கானல் ரோட்டிலும் இவர்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

    இவர்கள் தங்குவதற்கு வீடு இல்லை. படிப்பறிவு இல்லாத இவர்கள் தோட்ட வேலை, கூலி வேலை பார்த்து வருகின்றனர். குறைந்த வருமானத்தில் தினசரி வாழ்க்கையை ஓட்ட வேண்டியது உள்ளதால் இவர்களால் வாடகை கொடுத்து தங்குவதற்கும் வசதி இல்லை.

    இதனால் தார்ப்பாய் மற்றும் வனப்பகுதியில் கிடைக்கும் ஓலைகளை வைத்து வீடுகள் அமைத்து அதில் தங்கி வருகின்றனர். அதிக மழை பெய்யும் போதும், கடுமையான பனி பெய்யும் போதும், குடிசைக்குள் இருப்பது மிகவும் கடினமான செயலாகும்.

    பெரும்பாலான நாட்கள் இவர்களுக்கு இதே போல் அமைந்து விடுவதால் தினசரி குடும்ப செலவுக்கு மட்டும் வேலைக்கு சென்று பசியாறி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கையில், எங்களுக்கு ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளது. ஆனால் நடப்பதற்கு சாலை வசதி இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. மின்சார வசதி கிடையாது. எங்கள் பகுதி மக்களின் குறைகள் குறித்து பல அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் வாதிகளும் வாக்கு கேட்பதற்காக மட்டும் எங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். எங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ செலவு செய்ய முடியாது. 

    மேலும் வேலைக்கும் போக முடியாது என்பதால் பல நாட்கள் பட்டினியாகவே வாழ்க்கையை கழித்து வருகிறோம். எனவே அடிப்படை வசதிகளையாவது நிறைவேற்றித் தர வேண்டும் என்று தெரிவித்தனர். டிஜிட்டல் இந்தியாவில் அனைவருக்கும் வீடு என்று மத்திய அரசு பெருமிதம் கூறி வரும் நிலையில் வசிக்க இடம் இன்றி, குடிக்க தண்ணீர் இன்றி பொதுமக்கள் வாழ்க்கை நடத்தி வருவது வேதனையான வி‌ஷயம். எனவே இந்நிலை மாற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #digitalindia

    ×