சேலம் அருகே குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது

அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட குடிசை வீட்டை படத்தில் காணலாம்.
தீ விபத்து ஏற்பட்ட குடிசை வீட்டை படத்தில் காணலாம்.
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமடைந்தது வீட்டிலிருந்த சிலிண்டரை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் மற்றும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசம் ஆயின. இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com