search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burned"

    • திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது.
    • சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அடுத்த அணைக்கரை மதுசா லையில் வசிப்பவர் பாஸ்கர் (வயது 40) விவசாயி. இவர் தனது வீட்டின் வளர்க்கும் மாடுகள், கன்றுகளுக்காக வயலில் அறுவடை செய்த வைக்கோலை சுமார் 100 கட்டுக்கும் மேலாக அடுக்கி வைத்து போராக அமைத்து வைத்திருந்தார்.

    இந்நிலையில் திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருவி டைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வின்சென்ட் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அப்பகுதியில் குப்பை களை கொளுத்தி யதால் காற்றில் தீ பரவியதில் வைக்கோல் போர் எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரூ.20 ஆயிரம் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    • ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதையடுத்து, ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே 5 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகின. வீடுகளில் இருந்த பீரோ, நகை, பணம், டிவி, மிக்சி உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், பல்வேறு ஆவணங்களும் தீயில் கருகின.

    வீடுகளில் பிடித்த தீ, அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலிலும் பரவியது. இதில் பந்தல் முற்றிலும் எரிந்து நாசமானது. விசாரணையில், உசேன் என்பவருடைய வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டதால் இந்த தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

    விபத்து குறித்து தகவல் அறிந்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுளையும் செய்தனர்.

    பின்னர், ஆத்தூர் நகர தி.மு.க செயலாளர் பாலசுப்பிரமணியம் வழி காட்டுதலின்படி, ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவதற்கான வசதியும், தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

    • அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமடைந்தது வீட்டிலிருந்த சிலிண்டரை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் மற்றும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசம் ஆயின. இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானிசாகர் அருகே 3 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் சேதம் அடைந்தன. இந்த தீ விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம் பாளையம் கற்பூர காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமாரி (32), சாந்தாமணி (40), பத்மாவதி (40) இவர்கள் 3 பேரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு விவசாய தோட்ட வேலைக்கு சென்று விட்டனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் முத்துக்குமாரியின் வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அருகில் இருந்த சாந்தாமணி மற்றும் பத்மாவதி வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் முத்துக்குமாரி வீட்டில் உள்ள வீட்டுச் சாமான்கள், சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும் சாந்தாமணி வீட்டில் இருந்த மற்ற கட்டில், பீரோ மற்றும் ஒரு வெள்ளாடு, மொபட், பத்மாவதி வீட்டில் இருந்த வீட்டுச் சாமான்கள், அரை பவுன் தங்க கம்மல், பள்ளி மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    சாத்தான்குளம் அருகே வாழைத்தோட்டத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் சாலைப்புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). விவசாயியான இவர் இந்து முன்னணி மாவட்ட தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் பேய்க்குளம் பழனியப்பபுரம் சாலையில் உள்ளது. அங்கு பெரும்பாலான வாழைகள் குழை தள்ளி, அறுவடைக்கு தயாராக இருந்தன. 

     இந்த நிலையில் நேற்று மாலையில் அந்த வாழைத்தோட்டத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று தோட்டம் முழுவதும் பரவியது. 

    இதுகுறித்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் பத்மசேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் சுமார் 1,000 வாழைகள் தீயில் கருகி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

    இது குறித்து முருகேசன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், தனது தோட்டத்துக்கு மர்மநபர்கள் தீ வைத்து இருக்கலாம் என்று தெரிவித்தார். இதன் பேரில் வாழைத் தோட்டத்திற்கு யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    வங்காளதேசத்தில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார். #Bangladesh #StudentBurned
    டாக்கா:

    வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம் பெனி. இந்த நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி (வயது 19) என்ற இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தன்னை அவரது அறைக்கு அழைத்து தவறான எண்ணத்தில் தொட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நஸ்ரத் ஜகான் ரபி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமை ஆசிரியரை கைது செய்தனர். இதையடுத்து அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சிலரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து, தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நஸ்ரத் ஜகான் ரபி பொய் புகார் அளித்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்த 11 நாட்களுக்கு பிறகு தேர்வு எழுதுவதற்காக நஸ்ரத் ஜகான் ரபி பள்ளிக்கு சென்றார். அப்போது, அவரின் தோழி ஒருவர், அவரை பள்ளிக்கூடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு பர்தா அணிந்திருந்த 5 பேர் நஸ்ரத் ஜகான் ரபியை சூழ்ந்துகொண்டு தலைமை ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டினர். அதனை ஏற்க மறுத்ததால் அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து, பரிதாபமாக இறந்தார்.

    இந்த விவகாரம் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   #Bangladesh #StudentBurned
    பெரம்பலூர் வாரச்சந்தையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கொட்டகைகள் நேற்று திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் நாசமாயின.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையோரத்தில் உழவர் சந்தை அருகே வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். இதில் வியாபாரிகள் கீற்று கொட்டகை அமைத்து, அதில் தக்காளி, வெங்காய கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்டவையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த வாரச்சந்தையில் உள்ள ஒரு கீற்று கொட்டகை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைப்பதற்காக வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து ஓடி வந்தனர்.

    ஆனால் அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைப்பதற்குள், அருகில் உள்ள கொட்டகைகளுக்கும் தீ மள, மளவென பரவியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கொட்டகைகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து வாரச்சந்தை கொட்டகைகளில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனால் அந்த கொட்டகைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. நேற்று வாரச்சந்தை இல்லாததால் அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை. கொட்டகையில் எப்படி தீ பிடித்தது? யாரும் அந்த கொட்டைகையில் அமர்ந்து பீடி அல்லது சிகரெட் புகைத்து விட்டு, அணைக்காமல் போட்டு சென்றதால் தீ பிடித்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பெரம்பலூர் வடக்குமாதேவியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான சோளக்காட்டில் தீப்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    சேத்தியாத்தோப்பு அருகே 2 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
    சேத்தியாத்தோப்பு:

    சேத்தியாத்தோப்பு அருகே அகரசோழத்தரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்கண்ணன். இவருடைய மனைவி வசந்தா. நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் இவர்களுடைய மகன் ஆனந்தபாபு மட்டும் கூரை வீட்டில் இருந்தார். இந்த நிலையில் இரவு திடீரென கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள தையல்நாயகி என்பவரின் கூரை வீட்டுக்கும் பரவி எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு மற்றும் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இருப்பினும் தீ விபத்தில் முத்துக்கண்ணன், தையல்நாயகி ஆகியோரின் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், துணிகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து சோழத்தரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாபநாசம் அருகே நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சாம்பல் ஆனது. இதில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே ராஜகிரி சந்திகேட் பஜாரில் ஓட்டல் நடத்தி வருபவர்கள் முகமது ரபீக் (வயது 48), சிராஜுதீன் (54), காய்கறி கடை நடத்தி வருபவர் சாதிக் அலி (51). நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இந்த 3 பேருடைய கடைகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. 

    தகவலின் பேரில் பாபநாசம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் மாணிக்கராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். சம்பவம் குறித்து பாபநாசம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவை வைத்திக்குப்பத்தில் வீட்டில் டி.வி.வெடித்து சிதறியதில் 2 பேர் உடல் கருகினர்.

    புதுச்சேரி:

    புதுவை வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி முருகம்மாள் (வயது55). குப்புராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகம்மாள் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூனிமேட்டை சேர்ந்த முருகம்மாளின் உறவினர் பெர்னேஷ் (34) என்பவர் முருகம்மாள் வீட்டில் தங்கி புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு முருகம்மாள் சாப்பிட்டு விட்டு வீட்டின் வாரண்டாவில் தூங்கினார். பெர்னேஷ் வீட்டின் அறையில் தூங்கினார். இன்று காலை முருகம்மாள் டி.வி. நிகழ்ச்சியை பார்க்க சுவீட்சை போட்டார். அப்போது டி.வி. வெடித்து சிதறி வீட்டில் தீப்பிடித்தது.

    இதில் முருகம்மாளும், பெர்னேசும் தீயில் உடல் கருகினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுபற்றி அறிந்ததும் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சைபெறும் இருவரையும் பார்த்துவிட்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலங்குடி அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கூழையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 50). இவரது மனைவி காளியம்மாள்(46). குடிசை வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று அதிகாலை இவர்களது வீடு தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் சத்தம் போட்டு தூங்கி கொண்டிருந்த ராஜேந்திரன் மற்றும் காளியம்மாளை வெளியே வருமாறு கூறினர். அவர்களும் சுதாரித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். 

    இருப்பினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், பத்திரங்கள், நெல் மூட்டை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

    தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    தொப்பூர் மலைப்பாதையில் தனியார் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 36 பயணிகள் உயிர் தப்பினர். பஸ் எரிந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Omnibus #Fireaccident
    தருமபுரி:

    மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு பிரபல தனியார் நிறுவன ஆம்னி சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 58) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சின் பின் பகுதியில் உள்ள ஏர்கண்டி‌ஷன் எந்திரத்தில் புகை வந்தது. இதை பின்னால் வந்த ஒரு வாகன டிரைவர் கண்டுபிடித்து ஆம்னி பஸ்சின் டிரைவர் மாதேஸ்வரனிடம் கூறினார். உடனே அவர் பஸ்சை ரோட்டு ஓரமாக நிறுத்திவிட்டார். ஆஞ்சநேயர் கோவில் குழாயில் உள்ள தண்ணீரை எடுத்து வந்து அதில் டிரைவர் ஊற்றினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் 36 பேரையும் கீழே இறக்கி மாற்று பஸ்களில் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து அந்த தனியார் நிறுவன மெக்கானிக்குக்கு டிரைவர் போனில் தகவல் தெரிவித்தார். ஆனால் மெக்கானிக் வர காலதாமதம் ஆனது. பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தருமபுரியில் இருந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


    ஆம்னி பஸ் தீப்பிடித்து எரியும் காட்சி.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு மீண்டும் பஸ்சில் தீப்பிடித்தது. உடனே ஆம்னி பஸ் டிரைவரும், பொதுமக்களும் அந்த வழியே வந்த வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டனர். இதனால் அந்த பஸ்சில் இருந்து மற்ற வாகனங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. இதுகுறித்து மீண்டும் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் மீண்டும் வந்து தீயை அணைத்தனர்.

    பஸ் எரிந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் எரிய காரணம் என்ன? என்று பஸ்சின் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் நடந்தபோது பயணிகள் அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி பயணிகளை எழுப்பி விட்டதால் அவர்கள் அனைவரும் உயிர் தப்பினார்கள். மேலும் அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்திவிட்டதால் மேலும் வாகனங்கள் எரிவதும் தடுக்கப்பட்டது.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு இதே மலைப்பாதையில் தேங்காய் எண்ணெய் லாரிக்கு டிரைவர் தீவைத்தார். அந்த லாரி பின்னோக்கி வந்தபோது இன்னொரு கியாஸ் டேங்கர் லாரி, 2 கார்கள் எரிந்து சேதமாகின. நல்லவேளை தனியார் ஆம்னி பஸ் எரிந்தபோது அங்கிருந்த பொதுமக்களின் உதவியால் பெரிய அளவில் சேதம் அடைவது தடுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தினால் அந்த பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.  #Omnibus #Fireaccident

    ×