search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைக்கு ஒதுங்கிய போது குடிசை சரிந்து பெண் பலி
    X

    மழைக்கு ஒதுங்கிய போது குடிசை சரிந்து பெண் பலி

    • விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர்.
    • அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது. இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் சத்யா நகரில் விவசாயி வீரப்பன் (62) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று மாலை மிளகாய் அறுவடை செய்யும் பணியில் 12 பெண்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    குடிசை சரிந்து விழுந்தது

    இதையடுத்து விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர். அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது.

    இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.

    பெண் பலி

    இந்த விபத்தில் சுமதி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மாதம்மாள் (65), லட்சுமி (55), ராணி (50), கலா, மணி (39), சாலம்மாள் (55) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொளத்தூர் போலீசார் இறந்த சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சை

    படுகாயம் அடைந்த வர்களில் மாதம்மாள் என்ப வர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×