என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளத்தில் மூதாட்டியின் குடிசையில் திடீர் தீ
    X
    தீ விபத்தில் சேதமான குடிசை.

    விளாத்திகுளத்தில் மூதாட்டியின் குடிசையில் திடீர் தீ

    • விளாத்திகுளம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வி வயது (72) இவர் திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
    • நேற்று மதியம் செல்வி மூதாட்டி கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது வீடு மளமளவென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

    எட்டயபுரம்:

    விளாத்திகுளம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வி வயது (72) இவர் திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்துள்ளார்.அன்றாடம் கிடைக்கும்சிறு சிறு வேலைகளை வைத்து தனது வாழ்நாளை கழித்து வந்துள்ளார். நேற்றுமதியம் செல்வி மூதாட்டி கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது வீடு மளமளவென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்தனர்.


    இதுகுறித்து விளாத்திகுளம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    மூதாட்டியின் தீயில் எரிந்த உடமைகளுக்கு உரிய நிவாரணம் வேண்டும், 72 வயதான மூதாட்டி செல்விக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டும் என்று மூதாட்டி செல்வி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆதரவின்றி தவிக்கும் மூதாட்டியின் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டு நிதி உதவி வழங்கி, முதியோர் உதவித்தொகை வழங்க உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் 9-வது வார்டு கவுன்சிலரும், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான வேலுச்சாமி தனது சொந்த செலவில் மூதாட்டி செல்வி இல்லத்தை புதுப்பித்து தருவதாக கூறினார்.

    Next Story
    ×