என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mumbai"

    • ஐஐடி மெட்ராஸ் அதன் பெயரை மாற்றவில்லை, அது இன்னும் ஐஐடி மெட்ராஸ் தான்
    • மும்பை என்ற பெயரை அவர்கள் வெறுக்கிறார்கள், ஏனென்றால் அது மும்பா தெய்வத்தின் பெயர்.

    மகாரஷ்டிராவின் ஐஐடி பாம்பேயில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசிய கருத்துக்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஐஐடி பாம்பே நிகழ்ச்சியில் பேசிய ஜிதேந்திர சிங், "கடவுளுக்கு நன்றி, ஐஐடி பாம்பே இன்னும் அதே பெயரைக் கொண்டுள்ளது. நீங்கள் அதை ஐஐடி மும்பை என்று மாற்றவில்லை. அதேபோல், ஐஐடி மெட்ராஸ் அதன் பெயரை மாற்றவில்லை, அது இன்னும் ஐஐடி மெட்ராஸ் தான்" என்று கூறினார்.

    இந்நிலையில் இதுகுறித்து பேசிய ராஜ் தாக்கரே, "இப்போதுதான் அவர்களின் மனநிலை வெளிப்பட்டுள்ளது. அவர்கள் மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பறிக்க விரும்புகிறார்கள். மும்பை மராத்தியர்களுக்குச் சொந்தமானது. எங்கள் மும்பை மராத்தியர்களிடம் இருக்கும்.

    பல ஆண்டுகளாக சிலரின் ஆசை இப்போது வெளிவந்துள்ளது. ஜிதேந்திர சிங்குக்கு மும்பையுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதைச் சொல்வதன் மூலம், அந்த கட்சியின் உயர் மட்ட கைதட்டலைப் பெறுவதே இதன் நோக்கம்.

    மும்பை என்ற பெயரை அவர்கள் வெறுக்கிறார்கள், ஏனென்றால் அது மும்பா தெய்வத்தின் பெயர். அதுதான் இங்கே உண்மையான தெய்வம். மராத்தியர்கள் அந்த தெய்வத்தின் குழந்தைகள். அவர்கள் உங்களை வெறுக்கிறார்கள்.

    பஞ்சாபிலிருந்து சண்டிகர் நகரைக் கைப்பற்ற அவர்கள் முயன்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அதை எதிர்த்தபோது அது தோல்வியடைந்தது. ஆனால் அது தற்காலிகமானது. மும்பையைப் போலவே அங்கேயும் ஒரு சதித்திட்டம் உள்ளது.

    எங்களுக்கு மும்பை வேண்டாம், பம்பாயே வேண்டும் என்று கூறி நகரத்தைக் கைப்பற்ற அவர்கள் திரும்பி வருகிறார்கள். மும்பை பெருநகர நகரத்தை குஜராத்துடன் இணைப்பதே அவர்களின் திட்டம். எனவே, மராத்தி மக்கள் விழித்தெழுந்து செயல்பட வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்தார். 

    • மும்பை மாநகராட்சி சமீபத்தில் பைகுல்லாவில் உள்ள ஒரு உருது கற்பித்தல் மையத்தை இடித்தது.
    • ஒருபுறம், அவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்து, அவர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்புகிறார்கள். மறுபுறம், முஸ்லிம் வாக்குகளை கவர உருது மொழியில் சுவரொட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள்

    இஸ்லாமியர்களின் உருது மொழிக்கு எதிராக செயல்படும் பாஜக தேர்தலுக்காக உருது மொழியில் பிரசாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மும்பை மாநகராட்சி சமீபத்தில் பைகுல்லாவில் உள்ள ஒரு உருது கற்பித்தல் மையத்தை இடித்தது. பாஜகவின் எதிர்ப்புகளுக்குப் மத்தியில் மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்து.   

    இந்நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்குவதை ஒட்டி, தனது தொகுதியில் உருது மொழி பேசும் முஸ்லிம் சமூகத்தினரை ஈர்க்கும் வகையில் பாஜக பெண் வேட்பாளர் ஒருவர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை உருது மொழியில் அச்சிட்டு வாக்குகளை கோரியுள்ளார். அவரது படமும் உள்ளூர் தலைவர்களின் படங்களும் நோட்டீஸ்களில் அச்சிடப்பட்டுள்ளன.

    பாஜக சந்தர்ப்பவாத அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன.

    இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எம்என்எஸ் கட்சி, "அப்படியானால் இதுதான் பாஜகவின் தீவிர இந்துத்துவா அரசியலா? ஒருபுறம், அவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்து, அவர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்புகிறார்கள். மறுபுறம், முஸ்லிம் வாக்குகளை கவர உருது மொழியில் சுவரொட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.

    ஏஐஎம்ஐஎம் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில், "நேற்று வரை, பாஜக உருது மொழியை வெறுத்தது. அது ஒரு முழு சமூகத்தையும் அவமதிப்பதற்காக இருந்தது. உருது பேசுபவர்களைப் பற்றி மோசமான செய்திகளைப் பரப்பியது. ஆனால் இன்று அவர்களே முஸ்லிம் வாக்குகளுக்காக உருது சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். வாக்குகளைப் பெற அவர்கள் எதையும் செய்வார்கள்" என்று சாட்டியுள்ளது.  

    • நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
    • ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கின்றனர்.

    2025 இல் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

    பட்டியலில் முதல் பத்து நகரங்களில் 4 இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

    டாப் 10 நகரங்கள் பட்டியலில், 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கும் மும்பை நகரம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    அடுத்தடுத்த இடங்களில் காங்கோவின் Kasai-Oriental, Beni, பாகிஸ்தான் தலைநகர் கராச்சி, சூரத், ஹாங்காங்கின் Tamar, காங்கோவின் Kinshasa, சோமாலியா தலைநகர் Muqdisho அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள் உள்ளன.

    அதேநேரம் இந்திய அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட 10 நகரங்களின் பட்டியலில் முறையே, மும்பை, சூரத், அகமதாபாத், பெங்களூரு, கல்யாண், அலிகார், பிரயாக்ராஜ், ஸ்ரீநகர், புது டெல்லி, கான்பூர் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டின் நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. 146 கோடி பேருடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள MMRDA மைதானத்தில் பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்த இசை நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான வித்யா பாலன், மலைக்கா அரோரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 80 மொபைல் போன்கள் திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் ஏழு முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளனர்.

    சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • எங்கள் நகரத்தை கைப்பற்ற முயன்றால், அவர்களுக்கான கல்லறை எங்கள் மண்ணிலேயே கட்டப்படும்
    • அரசியல் ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வெளியாட்களிடம் மும்பை வீழ்ந்துவிடாது

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனகோண்டா பாம்பு என்று விமர்சித்துள்ளார்.

    மும்பையில் புதிதாக பாஜக அலுவகம் அமைக்க சட்டவிரோதமாக நிலம் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில் மும்பையின் வோர்லியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய தாக்கரே, "புதிய பாஜக அலுவலகம் அமைக்க மின்னல் வேகத்தில் நிலத்தைக் கைப்பற்றப்பட்டது.

    அனகோண்டா தன் பாதையில் உள்ள அனைத்தையும் விழுங்குவது போல, இவர்கள் மும்பையையும் முழுமையாக விழுங்க நினைக்கிறார்கள்" என்று அமித் ஷாவையும், பாஜகவையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.

    மேலும் பாஜக தலைவர்களை ஆப்கானியப் படையெடுப்பாளரான அஹமது ஷா அப்தாலியுடன் ஒப்பிட்ட தாக்கரே, "உண்மையான அப்தாலிகள் மீண்டும் வந்துள்ளனர்.

    இந்த முறை அவர்கள் டெல்லி மற்றும் குஜராத்திலிருந்து வந்துள்ளனர். ஆனால், அவர்கள் எங்கள் நகரத்தை கைப்பற்ற முயன்றால், அவர்களுக்கான கல்லறை எங்கள் மண்ணிலேயே கட்டப்படும்" என்று எச்சரித்தார்.

    அரசியல் ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வெளியாட்களிடம் மும்பை வீழ்ந்துவிடாது என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.  

    • இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவு குறையும்.

    இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று மும்பை வந்தடைந்தார்.

    இன்று பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. ஜூலை மாதம், எனது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டோம்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் (விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்), இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவு குறையும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வர்த்தகம் அதிகரிக்கும். இதனால் நமது தொழில்கள் மற்றும் நுகர்வோர் பயனடைவார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குள், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வணிகக் குழு உங்களுடன் வருவதால், நீங்கள் இந்தியாவிற்கு வருகை தருவது, இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மையில் புதிய வீரியத்தின் அடையாளமாகும்.

    இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மிகப்பெரிய வணிகத் தலைவர்கள் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்தியா-இங்கிலாந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் சாத்தியக்கூறுகள் உள்ளன

    இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள். ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகளில் பரஸ்பர நம்பிக்கை நமது உறவுகளின் அடித்தளத்தில் உள்ளது. உலகளாவிய ஸ்திரமின்மையின் தற்போதைய சகாப்தத்தில், இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வளர்ந்து வரும் கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது.

    இன்றைய கூட்டத்தில், இந்தோ-பசிபிக், மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் உக்ரைன் மோதல் குறித்து விவாதித்தோம். உக்ரைன் மோதல் மற்றும் காசா பிரச்சினைகளில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று கூறினார்.

    • பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மும்பை வந்தடைந்தார்.
    • மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்றார்

    இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் மும்பை வந்தடைந்தார்.

    மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்றனர்.

    கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது.
    • நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

    புதுடெல்லி

    தேசிய குற்ற ஆவண காப்பகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பதிவாகும் குற்ற வழக்குகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுவது வழக்கம்.

    இந்நிலையில், பொருளாதாரம் மற்றும் சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வு முடிவுகளை சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்டது. அதன் விபரம் வருமாறு:

    கடந்த 2023-ல் நம் நாட்டில் நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் 27,675 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானா 26,321 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 19,803 நிதி மோசடி வழக்குகளில் மகாஷ்டிரா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    கடந்த 2023-ல் பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை 6,476 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இது, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 484 வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. தெலுங்கானாவின் ஐதராபாத், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகியவை பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழும் பெருநகரங்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    கடந்த 2023-ல் சைபர் குற்றங்கள் அதிகம் பதிவான நகரமாக கர்நாடகாவின் பெங்களூரு உள்ளது. இங்கு மட்டும் 17,631 வழக்குகள் பதிவானது தெரியவந்துள்ளது. தெலுங்கானாவின் ஐதராபாத் 4,855 வழக்குகளுடன் இரண்டாமிடத்திலும், மும்பை 4,131 வழக்குடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

    • பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர்.
    • 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தஹிசர் பகுதியில் உள்ள 23 மாடி கட்டிடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்தனர்.

    பிற்பகல் 3 மணியளவில் குடியிருபின் ஏழாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் தகவலறிந்து அங்கு விரைந்தனர்.

    கிட்டத்தட்ட 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மாலை 6:10 மணிக்கு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    மீட்புக் குழுவினர் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர். இவர்களில் 19 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. 

    • மிகவும் ஆபத்தான XTX மற்றும் XTX Molly உள்ளிட்ட போதைபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 12 பேரை கைது செய்தனர்.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவது குறித்து மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வந்தது.

    இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் தெலுங்கானா காவல்துறையுடன் இணைந்து மகாராஷ்டிரா காவல்துறை ஐதராபாத்தில் புறநகர்ப் பகுதியான செராமல்லியில் தனியார் ரசாயன தொழிற்சாலையை சோதனையிட்டது.

    இந்த ஆய்வுகளின் போது, மிகவும் ஆபத்தான XTX மற்றும் XTX Molly உள்ளிட்ட போதைபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆலையில் இருந்த ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 12 பேரை கைது செய்தனர். அவர்களுடன் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த ஐ.டி. ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

    • 400 கிலோகிராம் RDX உடன் 34 மனித வெடிகுண்டுகள் நகரில் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
    • 24 மணி நேரத்திற்குள் மும்பை காவல்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளது.

    400 கிலோகிராம் RDX உடன் 34 மனித வெடிகுண்டுகள் நகரில் தயாராக இருப்பதாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நேற்று வந்த மிரட்டல் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

    லஷ்கர்-இ-ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மிரட்டல் செய்தியில், 34 தற்கொலை குண்டுதாரிகள் 1 கோடி மக்களைக் கொல்வார்கள் என்றும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    விநாயகர் சதுர்த்தியின் நாளில் 10-வது நாளான இன்று (செப்டம்பர் 6) சிலைகள் நீரில் கரைக்கப்பட ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்த மிரட்டல் வந்திருந்தது.

    இந்நிலையில் மிரட்டல் விடுத்த நபரை 24 மணி நேரத்திற்குள் மும்பை காவல்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்டவர் அஸ்வனி குமார் (வயது 51) என்ற ஜோதிடர்.

    பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அஸ்வினி குமார் மீது அவரது நண்பர் கடந்த 2023 இல் பாட்னா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அஸ்வினி குமார் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த அஸ்வினி குமார் தனது நண்பனை பழிவாங்க திட்டம் தீட்டினார்.

    அதன்படி நண்பரை பயங்கரவாதியாக சித்தரித்து போலீசில் சிக்க வைக்க மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட அஸ்வினி குமாரிடமிருந்து ஏழு மொபைல் போன்கள், மூன்று சிம் கார்டுகள், ஆறு மெமரி கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • 34 தற்கொலை குண்டுதாரிகள் 1 கோடி மக்களைக் கொல்வார்கள் என்றும், மும்பை நடுங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    • விநாயகர் சிலைகளை 10-வது நாளான நாளை (செப்டம்பர் 6) ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது.

    400 கிலோகிராம் RDX உடன் 34 மனித வெடிகுண்டுகள் நகரில் தயாராக இருப்பதாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மிரட்டல் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லஷ்கர்-இ-ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மிரட்டல் செய்தியில், 34 தற்கொலை குண்டுதாரிகள் 1 கோடி மக்களைக் கொல்வார்கள் என்றும், மும்பை நடுங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மிரட்டலைத் தொடர்ந்து மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி நாளில் வைத்து வணங்கப்பட்ட விநாயகர் சிலைகளை 10-வது நாளான நாளை (செப்டம்பர் 6) ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த சூழலில் வந்த இந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×