என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி"

    • மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவைகளையும் ஈஷா இலவசமாக வழங்கி வருகிறது.
    • பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள சூர்யகுண்ட மண்டபத்தில் பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு 'சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை' வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஈஷா அறக்கட்டளை சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அந்த வரிசையில், இந்த ஆண்டு சிங்கபதி, சாடிவயல், நல்லூர்பதி, முள்ளங்காடு, தானிக்கண்டி, மடக்காடு, சர்க்கார்பதி உள்ளிட்ட பல்வேறு பழங்குடியினக் குடியிருப்புகள் மற்றும் போளுவாம்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையினை ஈஷா பிரம்மச்சாரிகள் வழங்கினர்.

    ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி மற்றும் கிராமப்புற பகுதிகளில் பொருளாதாரம் அல்லது குடும்பச் சூழல் காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முறையான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.



    இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள் பி.எஸ்.ஜி, ராமகிருஷ்ணா, வி.எல்.பி ஜானகியம்மாள், கலைமகள், அவினாசிலிங்கம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரிகளில் மேற்கல்வி பயின்று வருகின்றனர். இதில் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்கள் அடங்குவர்.

    குறிப்பாக, இளங்கலை வணிகவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், தடய அறிவியல் மற்றும் குற்றவியல், விமான நிலைய மேலாண்மை, தாவரவியல், வேதியியல் மற்றும் ஆங்கில இலக்கியம் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து இம்மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    ஈஷா கல்வி உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமில்லாமல், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கான பயிற்சி, மென்பொருள் துறை சார்ந்த பயிற்சிகள், வேலைக்கான நேர்காணல்களில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள் மற்றும் 'சயின்ஸ் ஸ்பார்க்' என்ற பெயரில் அறிவியல் தொடர்பான பல்வேறு சிறப்புப் பயிற்சிகளையும் இந்த மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவைகளையும் ஈஷா இலவசமாக வழங்கி வருகிறது.



    இத்திட்டத்தின் மூலம் பயின்ற பல மாணவர்கள் இன்று ஐடி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பொறியாளர்கள், கணக்காளர்கள், முன்னணி மருத்துவமனைகளில் செவிலியர் மற்றும் ஈஷா யோக மையத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

    இவ்விழாவில் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் அவர்களது பெற்றோர், முந்தைய ஆண்டுகளில் கல்வி உதவித் தொகை பெற்று தற்போது பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக மாணவர்கள் தங்களின் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இதனுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த விழாவின் அனைத்து அம்சங்களையும் மாணவர்களே முன்னின்று ஒருங்கிணைத்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.. 

    • தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு எழுதியுள்ளார்.
    • வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார்.

    மும்பை:

    ஆண் கல்வியறிவு பெற்றால் ஒரு தனிநபர் பயன் பெறுவார், ஆனால் ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் ஒரு தலைமுறையே பயன்பெறும் என்பது பெண் கல்வியின் மகத்துவத்தை போற்றும் பொன்மொழியாகும்.

    அந்தவகையில் கல்வியை பிரதானமாக கருதிய பெண் ஒருவர், தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு அறைக்கு வந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மற்ற பெண்களுக்கு ஆகச்சிறந்த முன்உதாரணமாக திகழ்ந்துள்ளார்.

    மராட்டிய மாநிலம் நாந்தெட்டை சேர்ந்தவர் சீத்தல்(வயது21). வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார். கல்வியின் முக்கியத் துவத்தை அறிந்து பின்னர் கல்வியை தொடர்ந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவர் மணமாலை சூடினார். திருமணத்துக்கு பிறகும் கல்வியை கைவிட அவரது மனது சம்மதிக்கவில்லை. அங்குள்ள ஸ்ரீபாசவேஷ்வர் ஜூனியர் கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இல்லற வாழ்க்கை காரணமாக 10 நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. பொதுத்தேர்வு சமயத்தில் குழந்தை பிறந்தாலும், அது பரீட்சை எழுத அவருக்கு தடையாக அமையவில்லை. அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல் பொதுத்தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்று தீர்க்கமான முடிவை எடுத்தார்.

    தனக்கு குழந்தை பிறந்த 2 நாட்களில், அதாவது கடந்த 10-ந்தேதி நடந்த ஆங்கில தேர்வை அவர் தனது சகோதரியுடன் வந்து எழுதி அனைவரை யும் வியக்க வைத்தார். நேற்றுமுன்தினம் அரசியல் அறிவியல் தேர்வை எழுதினார்.

    பச்சிளம் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேவையான வசதிகளை தேர்வு மைய அதிகாரிகள் செய்தனர். தேர்வு மையத்தில் குழந்தையை தூங்க வைப்பதற்கான தொட்டில் உள்ளிட்ட உதவிகளை செய்து கொடுத்தனர். கல்வியை தனது இரு கண்களாக கருதிய பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையுடன் வந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சம்பவம் மராட்டியத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வேறு எதையும் கொடுப்பதைவிட அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்.
    • பயம், மிரட்டல், பணம், பக்தி என நிறையவற்றை உலக அரசுகள் நம்பியுள்ளது.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், திரைப்பட நடிகர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்நிலையில் இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி,

    "இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு பெரிய சந்தோஷம், பெருமையும்கூட. நம்மை படிக்கவைக்க ரொம்ப நாட்களாகவே இந்த அரசு திட்டம் போட்டு கொண்டுவருகிறது. வேறு எதையும் கொடுப்பதைவிட அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம். அதற்கான முக்கிய பங்கை இந்த அரசு மறுபடி மறுபடி கொடுத்துக்கொண்டே வருகிறது. அதற்கு மிகவும் நன்றி. ஒருவரின் வளர்ச்சிக்கு அவரின் அறிவுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களை முன் நகர்த்தி செல்ல பெரும் பங்கு வகிக்கிறது அரசு. அதற்கு ரொம்ப நன்றி." என தெரிவித்தார். 


    மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் விஜய் சேதுபதி 

    நடிகர் மணிகண்டன் பேசியதாவது, 

    "தனது திறனை வெளிப்படுத்த இருக்கும் வசதி, வாய்ப்புகள் கிடைக்காத ஒரு மனிதனின் சோகத்தைவிட, பெரியசோகம் இந்த உலகத்தில் எதுவும் கிடையாது. எவ்வளவோ திறமைகள் இருந்தும், அதனை வெளிப்படுத்த சரியான வசதிகள் இல்லாத எத்தனையோ பேரை நான் பார்த்துள்ளேன். இனிமேல் அதுபோல நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்ற நிலையை இங்குள்ள முத்தான திட்டங்கள் உருவாக்கியுள்ளன. அதற்காக தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய நன்றிகள்.

    முக்கியமாக பள்ளிக்கல்வித்துறையில் நான் நிறைய திட்டங்களை பார்த்துள்ளேன். உலக வரலாற்றில் ஒரு அரசு மூலதனமாக எதனை நம்புகிறது என்பது மிக முக்கியமான ஒன்று. பயம், மிரட்டல், பணம், பக்தி என நிறையவற்றை உலக அரசுகள் நம்பியுள்ளது. ஆனால் திராடவி மாடல் அரசு அறிவை, கல்வியை மூலதனமாக நம்புகிறது. அது மிகப்பெரிய மூலதனம் என்பதற்கான சான்றாக, இன்று விதைக்கும் விதைகளின் பலனை எதிர்காலத்தில் நிச்சயமாக பார்ப்போம்." எனப் பேசினார். 

    • கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
    • தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,

    கோவில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் தவறில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது.
    • சிறுவனை நேரில் அழைத்துப் மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.

    ஆபரேஷன் சிந்தூரின்போது தாரா வாலி என்ற கிராமம் அருகே சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு குடிநீர், ஐஸ்கிரீம், பால், லெஸ்சி போறவற்றை கொடுத்து சவான் சிங் (10) என்ற சிறுவன் உதவியுள்ளார்.

    இதனால் பெரோஸ்பூரைச் சேர்ந்த ஷர்வன் சிங்கை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

    இந்நிலையில், இந்த சிறுவனின் துணிச்சலை பாராட்டும் வகையில், அவரது முழு கல்வி செலவையும் ஏற்பதாக இந்திய ராணுவம் (Golden Arrow Division of the Indian Army) அறிவித்துள்ளது.

    • பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?
    • அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!

    முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.

    இந்நிலையில், காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!

    நல்லவேளை, "பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?" என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று!

    கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!" என்று தெரிவித்துள்ளார். 

    • நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார்.
    • நான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என்னால் அதற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை.

    ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது அவர் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தால் நான் பாதிக்கப்பட்டேன் என்று நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய நடிகர் விஜயகுமார், "நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் முதலமைச்சராக இருந்த ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். அதனால் நான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என்னால் அதற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை.

    என்னால் தான் படிக்க முடியவில்லை. ஆனால் இன்று அப்படி இல்லை. மதிய உணவு திட்டம் மட்டுமில்ல., காலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் கல்விக்காக இரவு, பகல் பாராமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார்" என்று தெரிவித்தார்.


    • நவீன கல்வி கற்கும் முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
    • அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    சிவகாசி:

    போட்டி நிறைந்த இன்றைய உலகில் ஒருவர் வெற்றியாளராக திகழ்வதற்கு கல்வி இன்றியமையாததாக உள்ளது. ஆண்டுதோறும் மாறி வரும் நவீன கல்வி கற்கும் முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.

    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் பல்வேறு வசதிகளையும் சிறப்பு கற்றல் முறைகளையும் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

    தனியார் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் பிரச்சினையால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக அரசு பள்ளிகளுக்கு பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை சேர்க்க முன் உதாரணமாக அரசு அதிகாரிகளும், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனை சில அதிகாரிகளும் பின்பற்றுவதை அவ்வப்போது காண முடிகிறது. ஆங்காங்கே கலெக்டர்கள் முதல் அரசு கடைநிலை ஊழியர்கள் சிலர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து முன் உதாரணமாக திகழ்ந்து உள்ளனர்.

    அந்த வரிசையில் தற்போது சார்பு நீதிபதி ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாரதி. புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றி வந்த விஜயபாரதி, சிவகாசி சார்பு நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    சிவகாசி நீதிமன்றத்தில் பொறுப்பேற்ற நீதிபதி விஜயபாரதி தனது மகள் அன்பிற்கினியாளை(7) சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவியை வரவேற்றனர்.

    நீதிபதியே தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து உள்ளது மற்ற அரசு அதிகாரிகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளது. இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டம்.
    • ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது

    பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது முத்திரை பதித்து இருக்கக்கூடிய திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம்.

    ஏற்கனவே பெண்களுக்காக நடைமுறையில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. அந்த திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழிற்படிப்புகளில் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது.

    புதுமைப்பெண் திட்டம்

    இந்த திட்டத்தில் பயன்பெற அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிப்பை தொடரும் மாணவிகள் விண்ணப்பிக்க முதலில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவிகளிடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்ததற்கான சான்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு எண் ஆகியவை கேட்டு பெறப்பட்டது.

    அவ்வாறு விண்ணப்பித்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வரும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் இதற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.

    3-வது தவணையாக...

    விண்ணப்பித்து தகுதியான மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1,000 உதவித்தொகை சென்றடையும் வகையில், அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் இணைய வழியில் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

    அதன்படி, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதில் இருந்து தற்போது 3-வது தவணையாக ரூ.1,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது முதலாம் ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவிகளும், ஏற்கனவே 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வந்து இந்த திட்டத்தில் சேராதவர்களும் வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜி.
    • கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது.

    மற்ற பாடங்கள் எல்லாவற்றையுமே ஆர்வத்தோடு படிக்கும் குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜியாக இருப்பதுண்டு. இதை அலர்ஜி என்பதைவிட, 'ஃபோபியா' (பயம்) என்றே குறிப்பிட வேண்டும்.

    ஆம்...! அமெரிக்காவின் ஒஹையோவில் உள்ள கிளீவ்லேண்ட் ஸ்டேட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் ஆஷ்கிராப்ட் இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். அதில் பல அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

    கணித பயம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர் செய்த ஆய்வில், கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது. கூடவே படிப்பு மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடுகிறதாம். இதனால், அவர்கள் மிகச் சாதாரணமான இரண்டு எண்களைக் கூட்டுவது போன்ற விஷயங்களுக்குக் கூட பதற்றமும், திணறலும் அடைகிறார்கள். சிலருக்கு ரத்த அழுத்தத்தின் அளவும், இதயத் துடிப்பின் அளவும் எகிறியதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    இதற்கான காரணம் குறித்து விளக்குகையில், ''எண்களைப் பார்த்ததும் இவர்களது மனதில் ஏராளமான சிந்தனைகள் அலைமோதுகின்றன. அதனால் கணக்கிடத் தேவையான சிந்தனையோ, பொறுமையோ அவர்களிடம் இல்லாமல் போகிறது. இதனால் நாளடைவில் அவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்து போகிறது.

    இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி... கணிதம் தொடர்பான பயத்தை மழலை பருவத்திலேயே அகற்றி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான். கணக்கு என்றவுடனே, முகம் சுழிக்கும் குழந்தைகளுக்கு, அதை உற்சாகமாக எதிர்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுங்கள். அப்போது அவர்களது பதற்றமும், கணக்கு பயமும் குறைந்துவிடும்'' என்கிறார் ஆஷ்கிராப்ட்.

    • திருப்பத்தூர் அருேக நடுவிக்கோட்டையில் நடந்த வி.எஸ்.எம். திருமண மகால் திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
    • சேதுபாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேதுகுமணன் பங்கேற்றார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் கண்டர மாணிக்கம் அருகே உள்ள நடுவிக்கோட்டையில் உள்ள மேலையூர் கிராமத்தில் ஆ.று.வீரய்யா சேர்வை சவுந்தரம்மாள் (வி.எஸ்.எம்.) திருமண மஹால் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

    விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக 'கல்வி தந்தை' என போற்றப்படும் சேதுபாஸ்கரா கல்வி குழும நிறுவனரான சேது குமணன் பங்கேற்று வி.எஸ்.எம். திருமண மகாலை திறந்து வைத்தார். இதில் பொறியாளர் ராஜா, காளிமுத்து, ஜெயக்குமார், கவுதமன், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா சோமன் மற்றும் பல்வேறு கட்சியை சார்ந்த அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கி யஸ்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதா விழாவில் பங்கேற்ற சேதுகுமணன் சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

    • கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
    • மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    கையெழுத்து அழகாக இருந்தால் வாழ்க்கையும் அழகாக மாறும் என்பார்கள். அந்த அளவுக்கு கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கையெழுத்து மோசமாக இருந்தால் அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும். தேர்வில் அதன் தாக்கம் வெளிப்படும்.

    மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பேனா கொண்டு எழுதும் நடைமுறை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை பொறுத்தவரை கையெழுத்து முக்கியமானது. அதுதான் அவர்களின் மதிப்பெண்ணையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். கையெழுத்தை மேம்படுத்துவதற்கு உதவும் சில டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.

    * தினமும் எழுதி பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அது கையெழுத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தொடக்கமாக அமையும். குழந்தைகள், மாணவர்களை பொறுத்தவரை வீட்டு பாடங்கள் எழுதுவதுடன் நிறுத்திவிடக்கூடாது. படிக்கும் பாடங்களை எழுதி பார்க்கலாம். அது நன்றாக நினைவில் பதிவதற்கு வழிவகுக்கும். புத்தகங்கள், பத்திரிகை செய்திகளை எழுதி பார்த்தும் பயிற்சி பெறலாம். இந்த விஷயத்தில் குழந்தைகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுக்குள்ளாகவே ஆர்வம் எழ வேண்டும். அதற்கேற்ப அவர்களை கவரும் வகையிலான எழுது பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் எண்ணத்தில் உதிக்கும் வார்த்தைகளை எழுதுமாறு ஊக்குவிக்கலாம்.

    * இவ்வளவு நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யக்கூடாது. அவ்வாறு நிர்பந்திப்பது அவசர அவசரமாக எழுதி பார்க்கும் மன நிலைக்கு தயார்படுத்திவிடும். முக்கியமான தேர்வுக்கு தயாராகும்போது வேண்டுமானால் சற்று வேகமாக எழுதி பார்க்க அனுமதிக்க வேண்டும். அந்த வேகம் எழுத்தின் தரத்தை பாழ்படுத்திவிடக்கூடாது. கையெழுத்து எப்போதும் மாறாமல் ஒரே நிலையில் இருப்பதற்கு ஏதுவாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

    * எழுதி பார்க்கும்போது குழந்தைகள் சரியான தோரணையில் அமர்ந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேஜையில் கைகளை வைத்தபடி நிமிர்ந்த நிலையில் அமர்ந்து எழுதுவதுதான் சரியான தோரணையாகும். எழுதும்போது மணிக்கட்டு பகுதியைவிட கைவிரல்களுக்குத்தான் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது பேனாவை கைவிரல்கள் அழுத்தி பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் எழுத்து முழு வடிவம் பெறும். அழகாகவும் மாறும். கைவிரல்களும், பேனா முனையும் நேர் நிலையில் இருக்க வேண்டும். சில குழந்தைகள் எழுதும்போது கைகளை வளைப்பதுண்டு. இது சரியான தோரணை கிடையாது.

    * பேனா தேர்விலும் கவனம் தேவை. சரியான பேனாவை தேர்ந்தெடுத்தால்தான் எழுத்து வடிவம் அழகு பெறும். எழுத்தின் மீது ஈடுபாடும் அதிகரிக்கும். எழுதும்போது குழந்தைகளின் கைகள் நிதானமாக இருக்க வேண்டும்.

    * காகித தேர்வும் எழுத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும். அடிக்கோடிட்ட வரிகள் கொண்ட பேப்பரில் குழந்தைகளை எழுத வைப்பது பொருத்தமாக இருக்கும். எழுத்துக்கள் நேர் வரிசையில் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.

    * இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து போய்விட்டது. காலங்கள் கடந்தும் நினைவுகளை அசைபோடவைக்கும் அசாத்திய ஆற்றல் கடிதத்துக்கு உண்டு. குடும்பத்தை பிரிந்து தொலைதூரத்தில் படிக்கும், வேலை பார்க்கும் இளம் வயதினர் குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

    ×