என் மலர்
நீங்கள் தேடியது "துணைமேயர்"
- மும்பை மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
- மனுவை வாபஸ் பெறும் நாளில் தான் தேர்தல் நடக்கிறது.
30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பா.ஜ.க அந்த மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.
மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க-89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன.
பெரும்பான்மைக்கு 114 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க கூட்டணிக்கு 118 கவுன்சிலர்கள் ஆதரவு உள்ளது. மும்பை மேயர் பதவி தொடர்பாக பா.ஜ.கவுக்கும், துணை முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார். சுழற்சி முறையில் 2½ ஆண்டுகள் மேயர் பதவி வேண்டும் என்று போர்க் கொடி தூக்கினார்.
மேயர் பதவி தொடர் பாக பா.ஜ.க-ஏக்நாத் ஷிண்டே இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பா.ஜ.கவுக்கு மேயர் பதவியும், ஏக்நாத் ஷிண்டே சிவ சேனாவுக்கு துணை மேயர் பதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மும்பை மேயர் பதவிக்கு பெண் உறுப்பினரான ரிதுதவ்டே பா.ஜ.க பெயரை பரிந்துரை செய்து அறிவித்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே சிவ சேனா சஞ்சய் சாடியை துணை மேயர் பதவிக்கு பரிந்துரைத்தது.
மும்பை மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடக்கிறது. மனுவை வாபஸ் பெறும் நாளில் தான் தேர்தல் நடக்கிறது.
போட்டி இருந்தால் தேர்வு நடைபெறும். பா.ஜ.க-வை சேர்ந்த ரிதுதவ்டே மும்பை மேயராகவும், ஏக்நாத் ஷிண் டேயின் சிவசேனா வேட்பாளர் சஞ்சய் சாடி துணை மேயராகவும் தேர்வாகிறார்கள்.
- பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது.
- தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.
திருப்பூர் :
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது. இதற்கு வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். இதில் 37-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து முடிந்த பணிகள் மற்றும் நடைபெற இருக்கிற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட துணை மேயர் கே.எம். பாலசுப்பிரமணியம் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
37-வது வார்டில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடுகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும். அதேபோல் சாக்கடை கால்வாய், சுகாதாரம்என அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி இளம் பொறியாளர் சுரேஷ்குமார், 54-வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம், சி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






