பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை - துணைமேயர் பாலசுப்பிரமணியம் பேச்சு

பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது. தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.
துணைமேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
துணைமேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
Published on

 திருப்பூர் :

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது. இதற்கு வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். இதில் 37-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து முடிந்த பணிகள் மற்றும் நடைபெற இருக்கிற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட துணை மேயர் கே.எம். பாலசுப்பிரமணியம் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

37-வது வார்டில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடுகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும். அதேபோல் சாக்கடை கால்வாய், சுகாதாரம்என அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி இளம் பொறியாளர் சுரேஷ்குமார், 54-வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம், சி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com