என் மலர்

  நீங்கள் தேடியது "3 died"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சத்ரபது ரெயில் நிலையத்தின் அருகே நடை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். #Mumbai #CSMT #footoverbridgecollapsed
  மும்பை:

  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எப்போதும் பரபரப்பாக காணப்படுவது சத்ரபதி ரெயில் நிலையம். இன்று மாலை வேலை முடிந்து பொதுமக்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

  அப்போது, பிளாட்பாரம் ஒன்றினை இணைக்கும் நடை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அதன்கீழ் சென்ற பலர் சிக்கிக் கொண்டனர்.  தகவலறிந்து உள்ளூர் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

  இடிபாடுகளில் சிக்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் 5 பேர் பலியானதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. #Mumbai #CSMT #footoverbridgecollapsed
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  பொள்ளாச்சி:

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் வினித் (28). கூலி தொழிலாளி.

  இவர் தனது நண்பர்கள் சூளேஸ்வரன்பட்டி ஜெய்கணேஷ் (24), ஜமீன் கோட்டாம்பட்டி சரவணன் (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

  பொள்ளாச்சி - கோட்டூர் சாலையில் சூளேஸ்வரன் பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் வினித் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜெய் கணேஷ், சரவணன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

  அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  அங்கு சிகிச்சை பலன் இன்றி 2 பேரும் பலியானார்கள். மோட்டார் சைக்கிளில் மோதிய காரை ஓட்டி வந்தவர் சின்னம் பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பது தெரிய வந்தது. அவரிடம் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பொள்ளாச்சி அருகே விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
  ×