என் மலர்
செய்திகள்

மும்பை சத்ரபதி ரெயில் நிலையம் அருகே நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது - 5 பேர் பரிதாப பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சத்ரபது ரெயில் நிலையத்தின் அருகே நடை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். #Mumbai #CSMT #footoverbridgecollapsed
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எப்போதும் பரபரப்பாக காணப்படுவது சத்ரபதி ரெயில் நிலையம். இன்று மாலை வேலை முடிந்து பொதுமக்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பிளாட்பாரம் ஒன்றினை இணைக்கும் நடை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அதன்கீழ் சென்ற பலர் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து உள்ளூர் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் 5 பேர் பலியானதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. #Mumbai #CSMT #footoverbridgecollapsed
Next Story






